விஸ்கான்சின்: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக் கூட ஆசிரியை ஒருவர் சிறுவனுடன் உறவு வைத்துக் கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அந்த டீச்சருக்கு வயது 24, சிறுவனின் வயது 11 ஆகும்.
இவருக்கு இன்னும் 3 மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ளது. இப்படி திருமணத்தை வைத்துக் கொண்டு இந்த சேட்டையில் அந்த டீச்சர் ஈடுபட்டுள்ளார் என்பதான் அதிர்ச்சிகரமானது. விஸ்கான்சின் மாகாணத்தின் செயின்ட் பால் நகரில் இவர் வசித்து வருகிறார். அவரது பெயர் மேடிசன் பெர்க்மான். அமெரிக்க சட்டப்படி 13 வயதுக்குட்பட்டவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது சட்டவிரோதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஹட்சன் பகுதியில் உள்ள ரிவர் கிரஸ்ட் தொடக்கப் பள்ளியில் டீச்சராக இருந்து வந்தார். அப்போது 5வது கிரேட் படிக்கும் சம்பந்தப்பட்ட மாணவரை தனது ஆசை வலையில் வீழ்த்தியுள்ளார். இருவரும் மொபைல் போனில் ஆபாச பேச்சுக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இந்த டீச்சர்தான் முதலில் இதையெல்லாம் தொடங்கியுள்ளார். இந்த மொபைல் போன் மெசேஜ்களை சிறுவனின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளிக் கூடத்தில் புகார் செய்தனர். பின்னர் பள்ளி நிர்வாகம் போலீஸில் புகார் கொடுத்தது. இதைத் தொடர்ந்து டீச்சர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பள்ளி நேரத்தின்போது லன்ச் டைமிலும், பள்ளி முடிந்த பின்னரும் சிறுவனை தனது இச்சைக்குப் பலியாக்கியுள்ளார் இந்த டீச்சர். பள்ளிக் கூடத்திலும், தனது வீட்டிலுமாக இதைத் தொடர்ந்துள்ளார். எப்படியெல்லாம் சிறுவனுடன் உறவில் ஈடுபட்டார் என்பதை அவர் டயரி போல எழுதி வைத்தும் உள்ளார். அதையெல்லாம் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
வருகிற ஜூலை மாதம் இவருக்குத் திருமணம் நடைபெறவுள்து. தனது நீண்ட கால காதலைத் திருமணம் செய்யவுள்ளார். இந்த நிலையில் அவர் சிறுவனுடன் உறவு வைத்து சிக்கியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கைது செய்யப்பட்ட டீச்சர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}