ஒரிகான்: அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில், ரயில் நிலைய பிளாட்பார்மில் நின்றிருந்த 3 வயது சிறுமியை ஒரு பெண் தண்டவாளத்தில் தள்ளி விட்டதால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் டிசம்பர் 28ம் தேதி நடந்துள்ளது. தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரிகானில் உள்ள ரயில்வே நிலையத்தில் பயணிகள் பலர் ரயிலுக்காக காத்திருந்தனர். அதில் இந்த 3 வயது சிறுமியும் அடக்கம். சிறுமி, நின்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்குப் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண், வேகமாக எழுந்து வந்து சிறுமியை பிடித்து தண்டவாளத்தில் தள்ளி விட்டு விட்டு மீண்டும் அமர்ந்து கொண்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த அசம்பாவிதத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து குழந்தையைத் தூக்கி காப்பாற்றி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அப்போது ரயில் வரவில்லை.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவரது பெயர் பிரையானா லேஸ் ஒர்க்மேன், 32 வயதாகிறது. ஏன் இவர் இப்படிச் செய்தார் என்று தெரியவில்லை. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மல்டினோமா கோர்ட்டில் இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்தப் பெண்ணுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}