வாஷிங்டன்: கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வான்ஸ் வெற்றி பெற்றால், தெலுங்கு பேசும் மக்களுக்கு பெருமை கிடைக்கும். காரணம், வான்ஸ் மனைவியின் பூர்வீகம் ஆந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு வம்சாவளியினர் லைம்லைட்டுக்கு வருவதால் இந்தியர்கள் குறிப்பாக தென்னிந்தியர்களிடையே பரவசம் கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபர் பதவிக்கு வந்த முதல் ஆசிய அமெரிக்கர், முதல் தமிழ் வம்சாவளி அமெரிக்கர், முதல் ஆசிய அமெரிக்க பெண், முதல் ஆசியர் என்று பல பெருமைகளை படைத்தவர் கமலா ஹாரிஸ். தற்போதைய அதிபர் ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போதைய அதிபர் தேர்தலிலும் ஜோ பைடனும், கமலாஹாரிஸும் மீண்டும் களம் குதித்துள்ளனர். அவர்களுக்கு எதிர்முனையில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக ஜே.டி. வான்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜே.டி.வான்ஸின் மனைவி பெயர் உஷா சிலிகுரி வான்ஸ். இவரது பூர்வீகம் தென்னிந்தியா. அதாவது ஆந்திர மாநிலம். இவரது பெற்றோர் பெயர் கிருஷ் சிலிகுரி மற்றும் லட்சுமி சிலிகுரி. இருவரும் பேராசிரியர்கள். கலிபோர்னியா மாகாணத்தின் சான்டியாகோ நகரில் செட்டிலானவர்கள். இங்குதான் உஷாவும் பிறந்தார். சிறு வயது முதலே படிப்பு படிப்பு என்று இருப்பாராம். புத்தகப் புழு என்றுதான் இவரை நண்பர்கள் அழைப்பார்கள். வரலாறு, சட்டம் என்று பல துறைகளில் பட்டம் பெற்றுள்ளார் உஷா சிலிகுரி. புகழ் பெற்ற ஏல் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தவர்.
ஏல் பல்கலைக்கழகத்தில் படித்தபோதுதான் தனது வருங்காலக் கணவர் வான்ஸை சந்தித்தார். காதலித்து இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர். உஷா இந்துப் பெண், இவரது கணவர் ரோன் கத்தோலிக்க கிறிஸ்தவர். இருவரும் அவரவர் மதங்களைப் பின்பற்றுகின்றனராம். இவர்களுக்கு இவான், விவேக் என்ற இரு மகன்களும், மீரா பெல் என்ற மகளும் உள்ளனர்.
வான்ஸ் துணை அதிபராக வெற்றி பெற்றால், கூடவே உஷா சிலிகுரியும் லைம்லைட்டுக்கு வருவார். கடந்த முறை தமிழ்நாட்டு மக்கள் கமலா ஹாரிஸைக் கொண்டாடினர். அதேபோல இந்த முறை தெலுங்கு பேசும் மக்களுக்குக் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்குமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}