பொங்கல் மட்டுமல்ல.. எல்லா நேரத்திலும் உழவர்களை நினைக்க வேண்டும்.. கார்த்தி

Jan 11, 2025,03:02 PM IST

சென்னை:  பொங்கல் தினத்தில் மட்டும் உழவர்களை சிந்திக்காமல் எல்லா நேரங்களிலும் நம்மால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் என நடிகர் கார்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


உழவுத் தொழில் செய்வோரை அங்கீகரிக்கும் வகையில் விவசாயத்திற்காக தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து சாதனை புரிபவர்களை கெளரவப்படுத்துவதற்காக உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார் நடிகர் கார்த்தி. இதன் மூலம் உழவர் பெருமக்களை கௌரவப்படுத்த உழவன் விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. 




கடந்த ஆண்டு உழவர் விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. அந்த வகையில் உழவன் பவுண்டேஷனின் உழவன் விருதுகள் 2025 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் அரவிந்த்சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.  

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேருக்கு 5 விருதுகள் மற்றும் தலா 2 லட்சம் ரூபாய் காசோலையாக வழங்கி உழவர்களை கௌரவப்படுத்தினார் நடிகர் கார்த்தி. இதில் வழங்கப்பட்ட விருதுகள் விவரம்:




1.சிறந்த பெண் வேளான் தொழில் முனைவோர் விருது திருமதி. சுகந்தி


2. நீர்நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது திருமதி. சியாமளா


3. மாபெரும் வேளான் பங்களிப்புக்கான விருது - கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையம்

  

4. கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்கான விருது கால்நடை மருத்துவர் திருமிகு. விஜயகுமார்


5. சிறந்த பெண்கள் வேளான் கூட்டமைப்புக்கான விருது - நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழு

 

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அவர்கள் பேசும் போது கூறியதாவது:




இந்த நிகழ்வுக்காக  ஆண்டு முழுக்க காத்திருக்கிறோம். நமக்கு நிறைய வெளிச்சம் கிடைக்கிறது. அந்த வெளிச்சத்தின் மூலம் தங்களின் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்களை, குறிப்பாக உழவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மக்களை எல்லோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், இவர்கள்தான் நாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் அதற்காகதான் உழவர் விருதை தொடர்ந்து நடத்தி வருகிறோம். 


இவ்வாறு செய்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும். இவர்கள் அங்கீகாரம் பெறுவதின் மூலம், மேலும் பலர் இவர்களை போல் மாற வேண்டும் என்று நினைப்பார்கள். இதன் மூலம் பல உழவர்கள் பயனடைவார்கள் என நம்புகிறேன்.  பொங்கல் தினத்தில் மட்டும் உழவர்களை பற்றி நினைக்காமல், எல்லா நேரங்களிலும் நம்மால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 




சரண்யா பொன்வண்ணன் பேசும் போது,  கார்த்தி இப்படியொரு விஷயத்தை செய்வதே பெருமையாக இருக்கிறது. எல்லோரும் சுயமாக வீட்டில் செடி வளர்ப்போம், தோட்டம் அமைப்போம். அதைப்பற்றி பெருமையாக பேசிக் கொள்வோம். இதை ஒரு பெரிய  திட்டமாக உருவாக்கி, நிறைய பேருக்கு அங்கீகாரம் கொடுப்பதோடு,  உழவன் ஃபவுண்டேஷன் மூலமாக உழவர்களுக்கு நிறைய உதவி செய்து வருவதை பார்க்கும்போது  பிரமிப்பாக இருக்கிறது. இது மிகப்பெரிய சமூக சேவை இதை தொடர்ந்து கார்த்தி செய்யறத   நினைத்து  பெருமையாக இருக்கிறது என கூறினார். 


நடிகர் அரவிந்த் சாமி பேசும் போது, நான் எனது 15 வயது வரை அப்பா, அம்மாவுடன் நசரத்பேட்டையில் உள்ள தோட்டத்தில்தான் தான் வசித்து வந்தேன்.  நானும் சிறு வயதில் விவசாயத்தில் இருந்ததால் விவசாயிகளின் கஷ்டம் எனக்கும் புரியும். அவர்களை கெளரவிக்கும் இப்படி ஒரு விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறது  என கூறினார். 




இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது, இதுவரை எல்லா மேடையும் நம்மை மேலே தூக்கி செல்லும் வகையில் தான் இருக்கும். ஆனால், இந்த மேடை தான் நாம் யார், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், நமது அடிவேர் என்ன என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது. விவசாயத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்பதை இங்கு வந்த பிறகு தான் அறிந்து கொண்டேன். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விழாவில் கலந்துக் கொண்டதே பெருமையாக இருக்கு என்று கூறினார்.


உழவன் ஃபவுன்டேஷனின் ‘கார்த்தியின் உழவர் திருநாள்’ விழா, இன்னும் பல கோடி பேரை சென்று சேரும் பொருட்டு, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று வரும் ஜனவரி 14ஆம் தேதி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் தங்கம் விலை... நேற்று மட்டும் இல்லங்க... இன்று குறைவு தான்

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு.. வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் அட்வைஸ்!

news

கரூர் சம்பவத்திற்குப் பின்னர் கூடும்.. தவெகவின் சிறப்புப் பொதுக்குழு.. என்ன பேசப் போகிறார் விஜய்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 05, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும் ராசிகள்

news

நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

news

மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு

news

தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!

news

உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!

அதிகம் பார்க்கும் செய்திகள்