- வ.கமலா
இன்னிசை கொஞ்சும் இனிமை விடியலும்
தென்றலும் வீசிடும் தெள்ளிய கீதமாய்
புன்னகை நோக்கும் புதுமலர் மின்னிடும்
நன்மையைத் தந்திடும் நல்மணம் இன்பமே
விண்ணில் தவழும் வியத்தகு மேகமும்
கண்ணின் விழியாய் கவரும் அழகுதான்
மண்ணின் உயிர்களும் மாரியால் வளத்தினில்
திண்மை வளத்தால் திகழ்ந்தே நிலைக்கும்

மலையின் வனப்பை மகிழ்வில் நிறுத்தி
அலைமிகு ஆழியை அகத்தினில் காண்பாய்
குயிலின் ஒலியை குவலயம் போற்றும்
மயிலின் எழிலை மனத்தினில் சீராய்
வியத்தகு பூக்கள் விரிந்திடும் உள்ளம்
நயமிகு ஓடை நனிமிகு செம்மை
வனத்தினில் புள்ளினம் வார்க்கும் கவிதை
கனவிலும் கேட்டல் கருத்தினில் ஓங்கி
இடுக்கண் விலக்கியே இன்பம் தருமே
கொடுக்கும் இறைமையை கொண்டே பழகல்
விலையிலா சொத்தாம் விரும்பலால் காத்திடு
நிலையிலா வாழ்வில் நிலைத்திடும் சொர்க்கம்
தரமிகு நல்லழகை தந்திடல் பேறாய்
கரத்தினில் ஏந்தி கனிவுடன் போற்றிடு
எண்ணிலாக் காட்சியும் ஏற்கும் மகிழ்வினில்
வண்ணமாய் நிற்றல் வளம்.
(கவிஞர் வ.கமலா, B.sc, M.A., M.com, M.Ed., M.phil. ஓய்வு பெற்றஆசிரியர். மூன்று நூல்கள் எழுதியுள்ளேன். ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறேன்)
இயற்கை!
இறைவனின் நிறம் ஐந்து!
பக்குவமாக பட்டறிவு புகுத்தி.. ஆக்கப்பூர்வ யோசனைகள் சொல்லும்.. அபூர்வப் பெட்டகங்களே!!
அண்ணா காபி சாப்டீங்களா அண்ணா.. Have a Hot Coffee!
சமையல் With ஸ்வர்ணா.. டாக்டர் மாமாவுக்குப் பிடிச்ச ராகி முருங்கை கீரை & பூ அடை!
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று!
அப்பம், அம்மா அப்பம் .. சிறார் பாடல்!
அக்டோபர் வந்தாச்சு.. இந்த மாதத்தில் என்னெல்லாம் ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?
வரி வட்டி திரை கிஸ்தி.. திரையில் முழங்கிய நடிப்புச் சிங்கம்.. சிவாஜி கணேசன் - !
{{comments.comment}}