சென்னை: உங்கள் வாழ்வில் அன்பை வெளிப்படுத்த உங்கள் அன்பானவர்களை அரவணைக்கும் அழகான தருணம் இன்று!
ஒவ்வொரு வருடமும் காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தக் காதலர் தின கொண்டாட்டம் பிப்ரவரி முதல் வாரத்தில் ரோஸ் டே வில் தொடங்கி இறுதியாக காதலர் தினம் வரை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பிப்ரவரி 12ஆம் தேதி ஹக் டே வை காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். ஹக் டேவில் காதலர்கள் இருவரும் கட்டி அணைத்து அன்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் நாள் இன்று!
ஒருவருக்கு வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியும் தெரிவிக்க கைகளை குலுக்கி நன்றி தெரிவிப்போம். ஆனால் நம் மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்த இரு இதயங்களும் ஒன்றிணைந்து ஹக் செய்து அன்பை வெளிப்படுத்த வேண்டும். கட்டிப்பிடிக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறது. அப்படி இரு இதயங்களும் ஒன்றிணையும் அழகான தருணம் இன்று!
ஹக் டே என்றால் அன்பின் வெளிப்பாடு. காதலர்கள் மட்டுமே உணர்ச்சிபூர்வமான அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. காதலர்கள், கணவன் மனைவி, அண்ணன் தம்பி, நண்பர்கள், அம்மா மகள், அப்பா பையன், அம்மா மகன், அப்பா மகள், நண்பர்கள், தோழிகள் என பாசத்தோடு அனைவரும் ஹக் செய்து அன்பை வெளிப்படுத்தலாம்.
கமல்ஹாசன் பாணியில் சொல்வதானால் இது கட்டிப்பிடி வைத்தியம்.. இதற்கு ஈடு இணையான பாச வெளிப்பாடு வேறு எதுவுமே இல்லைங்க. உனக்கு நான் இருக்கேன்.. ஆசுவாசமாக இரு.. அமைதியாக இரு.. எல்லாம் நலமாகும்.. தைரியமாக இரு என்று பல உணர்வுகளை இந்த கட்டிப்பிடி உணர்த்தும், ஒருவரது மனதுக்குள் நம்பிக்கையைக் கடத்தும்.
இந்த ஹக் டேவில் கமிட்டான காதலர்கள் இருவரும் ஹக் செய்து உனக்காக நான் இருக்கிறேன் என்பதை உணர்ச்சிபூர்வமான தங்களின் அன்பை இந்நாளில் வெளிப்படுத்தலாம். ஹக் டேவை பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே தெரியும். ஆனால் இந்த அரவணைப்பால் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பது தெரியுமா.. வாங்க சொல்கிறேன்.
காதலர்கள் அல்லது கரம் பிடித்தவர்கள் உங்களை ஹக் செய்யும் போது மன அழுத்தம் குறையுமாம். மனதில் எழும் வீண் எண்ணங்களால் ஏற்படும் டென்ஷன் விலகுமாம். அறிவியல் ரீதியாக அணைக்கும் போது ஆக்ஸிடாக்ஸின் என்ற ஹார்மோன் அதிகமாக வெளியிடப்படுமாம். இந்த ஹார்மோன்களால் மகிழ்ச்சியின் அளவும் அதிகரிக்குமாம். இதனால் மன ஆரோக்கியமும் மேம்படுமாம். காதலன் காதலியை அரவணைக்கும் போது இரு இதயங்களும் ஒன்றிணைந்து உனக்காக என்றும் நான் இருப்பேன் என்ற உணர்ச்சிகள் வெளிப்பாடுமாம்!
இப்ப தெரிஞ்சுகிட்டீங்களா ஹக் பண்ணும் போது என்ன நன்மைகள் நிகழும் என்று. உங்க அன்பானவர்களுக்கு ப்ரப்போஸ் செய்து, சாக்லேட் கொடுத்துட்டீங்க. இம்ப்ரஸ் பண்ணி கிப்ட் கொடுத்துட்டீங்க. அப்புறம் என்ன ஹக் செய்து பாசத்தோடு நான் இருக்கிறேன் என்ற காதல் நம்பிக்கை உணர்வையும் உங்க காதலிக்கு கொடுங்க.
ஹக் டேவை உற்சாகத்தோடு கொண்டாடுங்கள்.. காதலர்ஸ்.. மற்றவர்களும்தான்!
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}