சென்னை: பெண்ணே நமது வாழ்க்கையில் திகட்ட திகட்ட அளவுக்கு அதிகமான அன்பை வெளிப்படுத்தி, எந்த ஒரு சூழ்நிலையிலும் உன் கரம் பிடித்து வாழ்க்கை முழுவதும் உறுதுணையாக இருப்பேன் என நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை அளிக்கும் அழகான தருணம் இன்று..!
காதலர் தின கொண்டாட்டத்தில், ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 11ஆம் தேதி ப்ராமிஸ்டே கொண்டாடப்படுகிறது. முதல் நாள் ரோஸ் டேவில் துவங்கி ப்ரபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டேவை தொடர்ந்து இன்று ப்ராமிஸ் டே, உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் கொண்டாடப்படுகின்றது. காதலர் உறவில் நம்பிக்கையூட்டும் உணர்வை ஏற்படுத்த ப்ராமிஸ் டே கொண்டாடப்படும். இதனால் காதலன் காதலியிடையே வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்கி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறும் அழகான தருணம் இன்று..!
காதலன் காதலி மட்டுமல்லாமல் கணவன் மனைவி, அக்கா தங்கை, தம்பி அண்ணன் , நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் தங்கள் வாழ்நாளில் சுமுகமான குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும் ப்ராமிஸ் டே முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நாளில் ஒருவருக்கொருவர் வாக்குறுதிகளை கொடுத்துக்கொண்டு வார்த்தை உணர்வோடு அன்பை பரிமாறி கொள்வதால் இருவரிடையே உள்ள உணர்வுகள் மூலம் உங்கள் உறவுகள் வலுப்படும். இதனால் எவ்வித மன கசப்பும் இன்றி வாழ்க்கை முழுவதும் வசந்தம் காணப்படும்.
ப்ராமிஸ் டே அன்று நீங்கள் உங்களுடைய காதலருக்கோ காதலிக்கோ நீங்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் உங்களுடைய காதலை வலிமையாக்குவதோடு உங்களுக்கு காதலின் மீதும் ஆக்கபூர்வமான நம்பிக்கையை ஏற்படுத்தும். ஏற்கனவே துணை இருப்பவர்களோ அல்லது உங்களின் அன்பானவர்களுக்கோ இதயபூர்வமான வாக்குறுதிகளை கொடுத்து உங்கள் வாழ்க்கையை இனிமையாக்குங்கள்.
அதாவது காதலன் காதலி இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து எந்த ஒரு தருணத்திலும் பிரியாமல் இருப்போம். எத்தனை தடைகள் வந்தாலும் ஒன்றாக இணைந்து அதனை வெல்வோம் என முதலில் வாக்குறுதி அளியுங்கள். அதிலும் உனக்காக வாழ நினைக்கிறேன் என உறுதியளியுங்கள். உனக்கு நம்பிக்கையாகவும் துணையாகவும் இருந்து உன்னை பாதுகாப்பேன். வழிநடத்துவேன் என நம்பிக்கையூட்டுங்கள்.பிறகு காதலர்கள் இருவருக்கும் உள்ள நம்பிக்கையையும் பிணைப்பையும் யாராலும் அசைக்க முடியாது.
அப்புறம் என்ன.. உடனே உங்கள் மனதில் உள்ள உணர்வுகள், எண்ணங்கள், அன்பு,அர்ப்பணிப்பு, செயல், திட்டம் என அனைத்தையும் உங்கள் காதலிக்கு ஏற்றவாறு பிரதிபலித்து ப்ராமிஸ் டே அன்று, நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் இதயப்பூர்வமான வாழ்த்துகளை பகிருங்கள். பிராமிஸ் டே வை ஜமாயுங்கள்..!
2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!
டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!
கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!
15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!
Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்
மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!
{{comments.comment}}