சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி நிலையைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறது என்று பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி வந்து துடித்து பிறகு மருத்துவமனையில் சேர்த்து அதன் பிறகு ஆபரேஷன் நடந்து என்று ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து விட்டன.
இப்போது அவர் ஜாமீனுக்காக போராடிக் கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றம் வரை போயும் கூட அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. மூளையில் பிரச்சினை என்றெல்லாம் உச்சநீதிமன்றத்தில் சொல்லிப் பார்த்து விட்டார்கள்.. அதற்கெல்லாம் மருந்து இருக்கிறது, சாதாரண நோய்தானே என்று கூறி விட்டது உச்சநீதிமன்றம்.

இந்த நிலையில் மெலிந்த நிலையில் காணப்படும் செந்தில் பாலாஜியின் உருவமும் பேசு பொருளாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் வானதி சீனிவாசன், செந்தில் பாலாஜி நிலை குறித்துக் கவலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடையே அவர் பேசுகையில் செந்தில் பாலாஜி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், செந்தில் பாலாஜியின் உடல் நிலை அடிக்கடி மோசமாகிக் கொண்டிருப்பது, மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. ஒரு வேளை சிறைத்துறை அவரை சரியாக கவனிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் அவர் இருக்கிறார்.
அவருக்கு சரியான உணவோ மருத்துவ வசதியோ இல்லை கிடைக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. தமிழக அரசால் அவருக்குத் தேவையான மருத்துவத்தையோ, உடல் நிலையையோ கவனிக்க முடியாவிட்டால் மத்திய அரசின் உதவியை நாடலாம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை கொடுக்கலாம் என்று கூறினார் வானதி சீனிவாசன்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}