சென்னை: சென்னை- திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை செப்., 24ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.
இதோ வருகிறது அதோ வருகிறது என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை ஒரு வழியாக வந்து விட்டது. சென்னை எழும்பூரிலிருந்து இருந்து திருநெல்வேலி வரை இந்த ரயில் செல்லும். எழும்பூரிலிருந்து இயக்கப்படவுள்ள முதல் வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை டூ நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50க்கு புறப்பட்டு இரவு 10.40க்கு நெல்லை சென்றடையும். வழியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை ரயில் நிலையங்களில் நிற்கும். அதேபோல காலை 6மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50க்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
3வது வந்தே பாரத் ரயில்: தமிழ்நாட்டில் 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை – மைசூரு மற்றும் சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்குகின்றன. இதில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் தற்போது 3வது வந்தே பாரத் ரயிலை தமிழ்நாடு பெறுகிறது. தமிழ்நாட்டுக்கு மேலும் சில வந்தே பாரத் ரயில்களும் வரப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. படிப்படியாக இவை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}