வந்தே பாரத் மீது மோதிய பசு.. காலைக்கடன் போய்க்கொண்டிருந்தவர் மீது விழுந்து.. அவர் பலி!

Apr 21, 2023,11:56 AM IST
ஜெய்ப்பூர்:  ராஜஸ்தானில் ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. வேகமாக வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் ஒரு பசு மாடு மீது மோதியது. அந்த மாடு தூக்கி எறியப்பட்டு, தண்டவாளத்திற்கு ஓரமாய் உட்கார்ந்து காலைக்கடன் போய்க் கொண்டிருந்த நபர் மீது விழுந்ததில், அந்த நபர் அங்கேயே இறந்து போனார்.

இதுவரை வந்தேபாரத் மீது பல மாடுகள் மோதியுள்ளன. இதில் ரயிலின் முகப்புப் பகுதி சேதமடைந்துள்ளது. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக வந்தேபாரத் மீது மோதிய மாடு விழுந்து ஒரு உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.



ஆல்வார் என்ற ஊரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆரவல்லி விகார் காவல் நிலையத்திற்குட்பட்ட இப்பகுதியில் சிவதயாள் சர்மா என்ற நபர் தண்டவாளத்திற்கு அருகே அமர்ந்து காலைக்கடனை செலுத்திக் கொண்டிருந்தனர். அவர் ஓய்வு பெற்ற ரயில்வே எலக்ட்ரீசியன் ஆவார்.  அப்போது காலை 8.30 மணி இருக்கும்.


அந்த சமயத்தில் வந்தே பாரத் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே தனது காலைக்கடனை செலுத்திக் கொண்டிருந்தார் சிவதயாள் சர்மா. அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக ஒரு பசு மாடு தண்டவாளத்தின் குறுக்கே போய் விட்டது. ரயில் வந்த வேகத்தில் மாடு அப்படியே தூக்கி வீசப்பட்டது. தூக்கி எறியப்பட்ட அந்த மாடு நேராக சிவதயாள் சர்மா மீது வந்து விழுந்தது.

மிகப் பெரிய எடையுடன் கூடிய மாடு மேலே விழுந்ததில் வயதான சிவதயாள் சர்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து போனார். அவரது உடலை மீட்ட போலீஸார் அதை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்