சிறப்புக் குழந்தைகளின் செல்லம்.. வசந்தா செல்வகுமாரி.. வியக்க வைக்கும் பெண்மணி!

Oct 22, 2025,04:25 PM IST

-முனைவர் ரேவதி அம்பிகா


சென்னை: மாற்றுத் திறனாளிகளை கடவுளின் குழந்தைகள் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சிறப்புத்தன்மை வாய்ந்த குழந்தைகளை ஒரு பெண்மணி கொண்டாடித் தீர்த்துக் கொண்டுள்ளார். அவரது பெயர் வசந்தா செல்வகுமாரி. சென்னையைச் சேர்ந்தவர்.


மகாலட்சுமி ஒரு சிறப்பு குழந்தை. அவரை எடுத்து வளர்ப்பவர் தான் மகா பெரியம்மா என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் வசந்தா செல்வகுமாரி. வசந்தா செல்வகுமாரிக்கு ஒரு மகன். அவர் படித்து மிக நல்ல ஒரு நிலைமையில் இருக்கின்றார்.  வசந்தா செல்வகுமாரியின் தங்கை மகள் தான் மகாலட்சுமி. 




வசந்தா செல்வக்குமாரியின் தங்கைக்கு 5 குழந்தைகள். அதில் 3 குழந்தைகள் மாற்றுத்திறனாளியாக  பிறந்து இறந்து விட்டனர். இந்த நிலையில்தான், வசந்தா செல்வகுமாரி, தனது தங்கைக்குப் பிறந்த 3 வது மற்றும் 5வது குழந்தைகளை எடுத்து வளர்த்து வருகிறார்.


3 வது குழந்தை நன்றாக இருக்கிறார். 5 வது  குழந்தை (சிறப்பு குழந்தை) மகாலட்சுமி 6 வயது இருக்கும் போது எந்த செயல் பாடுகளும் இல்லாமல் இருந்தார். பின் NIEPMD அழைத்து வந்து தொடர்ந்து தெரபி கொடுத்து வசந்தா நடக்க வைத்தார். பின்னர் மகாலட்சுமியின் விருப்பம் என்ன என்பதை தெரிந்து கொண்டு அவரை நடனமாட கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்தினார் 


எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு அந்த நிகழ்வினை சிறப்பிப்பதே வசந்தா செல்வகுமாரியின் முழுமூச்சாக இருக்கும். இதில் அவர் மட்டும் பங்கு பெறாமல் அவரை சார்ந்தவர்களையும் அழைத்து சென்று அவர் பங்கேற்க வைப்பார். ஒவ்வொரு டிரஸ்ட்டில் இருந்து கூப்பிடும் அளவுக்கு தகுந்தாற்போல் 10, 20, 30 என்று நபர்களை அழைத்துக் கொண்டு செல்வார்.


கலைநிகழ்ச்சியாக இருக்கட்டும் அல்லது ஏதாவது பொருள் உதவியாக இருக்கட்டும் அனைத்தும் மிக சிறப்பாக செய்து கொண்டு உள்ளார். எந்த ஒரு நாளும் அவர் வீட்டில் இருந்ததாக சரித்திரமே கிடையாது. ஞாயிறு கூட வெளியில் எங்காவது சென்று கொண்டிருப்பார். எல்லா நிகழ்ச்சிகளிலும் அவரை காண முடியும். அவரை தெரியாதவர்கள் சென்னையில் இல்லை என்றே கூறும் அளவிற்கு மிகவும் பிரசித்தி பெற்றவர்.




நமது முதல்வரிடம் மு. க. ஸ்டாலினிடமிருந்து மகாலட்சுமிக்கு மாநில விருதும் கிடைத்துள்ளது. அமை்சசர் மா.சுப்பிரமணியன் அவர்களிடமும் விருது வாங்கி உள்ளார். ஒரு நிகழ்ச்சியின் போது முன்னாள் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியிடம் கை கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். சேவை சுடர் சேவை செம்மல் போன்ற பல விருதுகளையும் சான்றிதழையும் பெற்றுள்ளார்.


அனைத்து பிரபலங்களிடமும் குழந்தையின் நடன திறமையை காண்பித்து சான்றிதழ்களும் பதக்கங்களும் பெற்றுள்ளார். அவர் வீட்டில் வைப்பதற்கு இடம் இல்லாத அளவிற்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் இருவருக்கும் குவிந்து உள்ளன.  மாற்று திறனாளி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வசந்தா செல்வகுமாரி ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே ஜொலிக்கின்றார்.


இந்த அபாரமான பெண்மணிக்கு ஜஸ்ட் 75 வயதுதான் ஆகிறது. இந்தக் காலத்து இளசுகளுக்கு சவால் விடும் சுறுசுறுப்பு இவரிடம் உள்ளது. சுறுசுறுப்புடன் ஆர்வத்துடன் அவரின் பங்களிப்பை பார்க்கும் பொழுது வயது என்பது ஒரு பொருட்டல்ல என்பதை அவரைக் கண்டு தெரிந்து கொள்ளலாம். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் குழுவிலும் சிறப்பாக பங்கேற்று தனது பங்களிப்பினை ஆற்றி கொண்டு உள்ளார். 




அனைவரும் வசந்தா செல்வகுமாரி போன்று சிறப்பு குழந்தைகளை வளர்த்து, ஆதரித்து வந்தால் அதுபோன்ற குழந்தைகள் கண்டிப்பாக முன்னேறி வருவார்கள் என்பதற்கு இவர் ஒரு சான்றாக இருக்கிறார்.


(முனைவர் வே. ரேவதி அம்பிகா, சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். சிறப்புக் குழந்தைகளுக்காக பல நிகழ்வுகளை நடத்தியுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்

news

சிறப்புக் குழந்தைகளின் செல்லம்.. வசந்தா செல்வகுமாரி.. வியக்க வைக்கும் பெண்மணி!

news

டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

news

இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!

news

தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி

news

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!

news

மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)

news

குருவிக்கூடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்