வயநாடு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கலுடன் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். மீண்டும் அதே தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நான்கு தொகுதிகளை அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். இவருடன் உ.பி மேற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். அப்போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராகுல் காந்தி தன்னிடம், ரூ. 20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னிடம் சொந்தமாக எந்த வாகனமும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வருமான, சேமிப்பு, முதலீடுகள் என மொத்தம் ரூபாய் 9.24 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் அவரிடம் உள்ளன. ராகுல் காந்தியின் ரொக்கக் கையிருப்பு ரூ. 55,000 ஆகும். வங்கியில் உள்ள ரொக்க இருப்பு ரூ. 26.25 லட்சமாகும். ஷேர்கள் உள்ளிட்டவை மூலம் ரூ. 4.33 கோடி வைத்துள்ளார். ராகுல் காந்தியிடம் ரூ. 4.20 லட்சம் மதிப்பிலான நகைககள் உள்ளன.
டெல்லியில் விவசாய நிலம், அலுவலகம், உள்ளிட்ட ரூ. 11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் ராகுல் காந்தியிடம் உள்ளன. டெல்லி மேஹ்ராலி பகுதியில் உள்ள நிலமானது, பிரியங்கா காந்தியை இணை உரிமையாளாரக் கொண்டதாகும். ஹரியானா மாநிலம் குருகிராமில் ராகுல் காந்திக்கு ரூ. 9 கோடி மதிப்பிலான அலுவலகம் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டின் படி அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 15 .89 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜாவுக்கு மொத்தம் ரூபாய் 72 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}