சென்னை: தனது வீட்டில் நடந்த இடி ரெய்டு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தவர் ஆதவ் அர்ஜூனா. இணைந்தவுடன் அவருக்கு துணை பொதுச் செயலாளர் பதவியும் தரப்பட்டது. அவரது வீடு தேனாம்பேட்டையில் உள்ளது. அங்கு நேற்று இடி ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ரெய்டு குறித்து தற்போது ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகி இருந்தது. நேற்று காலை தொடங்கி இன்று காலை வரை ஒரு நாள் சோதனை நடத்தப்பட்டது.
பொது வாழ்வில் வெளிப்படத் தன்மையோடு இருக்க வேண்டியது அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதன் அடிப்படையில் சோதனையின் போது அதிகாரிகள் கேட்டு அனைத்து சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளுக்கும் அவதூறுகளுக்கும் யாரும் இடம் தர வேண்டாம். என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழி நின்று உறுதியோடு எனது பயணம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}