சென்னை: சென்னையில் நடைபெற உள்ள அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கட்சி ஆரம்பித்த தவெக தலைவர் விஜய். கடந்த மாதம் நடந்திய மாநாட்டின் மூலம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர் தவெக தலைவர் விஜய். மாநாடு நடந்து கிட்டதட்ட 20 நாட்களுக்கு மேலான நிலையில் இன்று வரை மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு குறித்து தான் அரசியல் கட்சி தலைவர்கள் இன்றுவரை பேசி வருகின்றனர். சிலர் பாசிட்டிவாகவும், சிலர் நெகடிவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டிசம்பர் 6ம் தேதி ஆதவ் அர்ஜூனா எழுதிய அம்பேத்கர் குறித்த புத்தகத்தை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிடுகிறார் என்றும், அந்த புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய்யும் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவலும் சில நாட்களாக தீயாக பரவி வந்தது. ஒரே மேடையில் விஜய் மற்றும் திருமாவளவனும் பங்கேற்க உள்ளதால், இருவரும் வருகின்ற 2026ம் தேர்தலில் கூட்டணி வைப்பதற்கான அச்சாரம் தான் இந்த புத்தக வெளியீட்டு விழா என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்த செய்திக்கு திருமாவளவன் பல முறை மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தான் நாங்கள் கூட்டணி வைப்போம் என்றும் உறுதியாக தெரிவித்தார்.புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சென்னையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ள புத்த வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கொண்டு தான் திருமாவளவன் பங்கேற்க மறுப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. திருமாவளவன் மறுப்பு தெரிவித்த நிலையில், தவெக தலைவர் விஜய்யின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒவ்வொரு விஷயத்திற்கும் வித்தியாசமாக முடிவெடுக்கும் விஜய் இதற்கு என்ன முடிவெடிப்பார் என்று பெருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}