2026ல் திமுகவுடன் தான் கூட்டணி.. வேறு இடம் போகும் அவசியம் விசிகவுக்கு இல்லை.. திருமாவளவன்

Nov 05, 2024,12:50 PM IST

திருச்சி: 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில் தான் நீடிப்போம். இந்த கூட்டணியை  விட்டுவிட்டு வேறு கூட்டணிக்கு போக வேண்டிய எந்த தேவையும் விசிகவுக்கு இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


திருச்சியில் இன்று செய்தியாளர்களை திருமாவளவன் சந்தித்தார். அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து திருமாவளவன் கூறியதாவது: கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கனவே நாங்கள் 7 ஆண்டுகளாக தொடர்ந்து, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இயங்கி வருகிறோம். வெற்றிகரமாக இயங்கி வருகிறோம். அதேபோல, அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியிலும் ஒரு அங்கமாக இருக்கிறோம். இந்த இரண்டு கூட்டணிகளையும் உருவாக்கியதில், விடுதலை சிறுத்தைகளுக்கும் பங்கு உண்டு. 




எனவே நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் தான் எங்கள் கவனம் இருக்கும். இந்த கூட்டணிகளை விட்டுவிட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை. ஏற்கனவே பலமுறை இதை நான் சுட்டிக்காட்டி உள்ளேன். வேண்டும் என்று திட்டமிட்டே விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை எழுப்புகிற முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகளின் மீதான நம்பகத்தன்மைகளை கேள்விக்கு உள்ளாக்க முயற்சிக்கிறார்கள். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். 


விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த ஊசலாட்டமும் இல்லை. நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். நான் ஏற்கனவே சொன்னதைப் போல மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிகளை உருவாக்கியதில் எங்களுக்கும் பங்கு உண்டு. எனவே அந்த கூட்டணி எங்கள் கூட்டணி. இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் எங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. எனவே அது எங்களுக்கான கூட்டணி.


இந்த கூட்டணியை சீரழிக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகளுக்கு எங்கிருந்து எழுந்தது. யாரோ ஒருவர் போகிற போக்கில் ஆளாளுக்கு ,இப்ப ஒரு கருத்தை சொல்லி விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல. அதை 100% நான் மறுக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் தான் இடம் பெறும். இதில் கேள்விக்கே இடம் இல்லை. இனி இப்படியொரு கேள்வியை யாரும் எழுப்ப வேண்டாம்  என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்