திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி வலுவாக உள்ளது.. திருமாவளவன் திட்டவட்டம்

Jun 19, 2025,06:15 PM IST
மதுரை: திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் வீசிக்காவுக்கு ஒரு பங்கு உண்டு. திமுக-விசிக கூட்டணி வலுவாக உள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகர் கோயிலுக்கு வந்த  விசிக கட்சி தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் பேசுகையில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் வீசிக்காவுக்கு ஒரு பங்கு உண்டு. எனவே கூட்டணியின் வலிமையை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. தொகுதி பங்கீட்டில் கூடுதலான இடங்களை கேட்போம். பேச்சுவார்த்தை முடிவில் தான் தொகுதி எண்ணிக்கை முடிவாகும். 



கொள்கை அடிப்படையில் எதிரிகள் யார் என்பதை முடிவெடுப்பதில் துணிவு தேவை. இந்திய தேசிய எதிர்ப்பில் தான் தமிழ் தேசியம் அடங்கியுள்ளது. இந்திய தேசியம் எது என்று தெளிவுபடத்தாமல், இந்திய தேசத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் எதிராக இருக்கிறது என்பதைப் பற்றி சொல்லாமலேயே திராவிட கட்சிகளை எதிர்ப்பது, பெரியாரை எதிர்ப்பது என்பது ஒரு சதி முயற்சியாகும். அது எந்த வகையிலும் தமிழ் தேசியத்திற்கு உதவாது.

பாஜக, பாமக ஆகிய இரண்டு கட்சிகள் இடம் பெற்றுள்ள கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் செல்லாது. அதிமுகவோடு பாஜக கூட்டணியில் இருப்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவில் ஒரு போதும் கூட்டணிக்கு  செல்ல முடியாது.  கூட்டணியில் இருக்கும் போது கூட்டணிக்கு தலைமை வைக்கும் கட்சியை மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் விடுதலை சிறுத்தை கட்சிக்கு கிடையாது என்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

news

Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்