சென்னை: சீமான் பேசுவதை பார்த்தால் பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா என்ற கேள்வி எழுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தொல் திருமாவளவன் இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், இடதுசாரி இயக்கங்களின் தூண்களாக நின்றவர்கள், அம்பேத்கர் இயக்கங்களுடன் கைகோர்த்து நின்றபோது நம்பிக்கையை பெற முடிந்தது. பொதுவாக அம்பேத்கர் இயக்கங்களை ஜாதிய இயக்கங்களாக புறம்தள்ளிய காலம் உண்டு. அந்த இயக்கங்களை ஊக்குவிக்காமல் கடுமையான விமர்சனங்களை வைத்த காலங்கள் உண்டு. அதன் மூலம் அம்பேத்கர் இயக்கங்கள் தனிமை தனிமைப்பட்டு சுருங்கிப்போன வரலாறு உண்டு.

வலது சாரி இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்களை அழிக்க நினைக்கிறது. தேர்தல் நடைமுறைதான் பாஜக வளர காரணமாக உள்ளது. இடதுசாரி இயக்கங்கள் அரசியல் கோட்பாடோடும், வலதுசாரி இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தோடும் வலிமையாக உள்ளன. தேர்தல் களத்தில் தலித்களை எவ்வாறு கைப்பற்றுவது என்று வலதுசாரி கைதேர்ந்து உள்ளனர். இடதுசாரி மற்றும் அம்பேத்கர் இயக்கங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆளுநர் கூறியது தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சியாகும். சீமான் பொருத்தம் இல்லாத அரசியலை தற்போது பேசிக்கொண்டு இருக்கிறார். ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வாக்குகளை பெற இந்த உத்தியை பின்பற்றுகிறாரா என என்ன தோன்றுகிறது. சீமான் பாசிச அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார். பெரியாரை விமர்சித்து பாஜக ஆதரவு வாக்குகளை பெற சீமான் முயற்சிக்கிறாரா என்று ஐயம் எழுகிறது. சீமானின் அரசியல் இனவாதத்தை நோக்கி பாசிச கூறுகளை கொண்டதாக உள்ளது. தமிழ் தேசியம் என்ற பெயரால் தமிழர்களுக்கு எதிரான அரசியலை சீமான் செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
TAPS: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுத்த ஹேப்பி நியூஸ்.. அறிக்கையின் முழு விவரம்!
I am Coming.. திரும்பி போற ஐடியாவே இல்ல.. விஜய்யின் ஜனநாயகன் பட டிரைலர் எப்படி இருக்கு?
வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லத் தயாரா?... 150 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல்? நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் புதிய சாதனை
காவல்துறையினர் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
திமுக தேர்தல் அறிக்கை: மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!
{{comments.comment}}