பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு.. யாரும் உரிமை கோர முடியாது : விசிக தலைவர் திருமாவளவன்!

May 14, 2025,05:44 PM IST

சென்னை: பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு திமுக, அதிமுக, விசிக என யாரும் உரிமை கோர முடியாது. சான்றுகள் மற்றும் ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள், மற்றும் இளம் பெண்களை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியது. இந்தச் சம்பவம்  தமிழகம்  முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவர்களின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று இறுதி கட்டத்தை எட்டியது.  அப்போது முன்னாள் அதிமுக நிர்வாகி அருளானந்தம் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார். 9 குற்றவாளிகளுக்கும் சிபிஐ கோரியிருந்தபடி சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.




இதனையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை  வழக்கின் தீர்ப்பை வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இடையே எக்ஸ் தளத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் நேற்று இணைய தள பக்கங்களில் வைரலாகியது.


இந்நிலையில், இன்று கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டுக்கு கலங்கத்தை ஏற்படுத்திய செயல். இது போன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இந்தியாவில் எந்த மூலையிலும் நடக்கக்கூடாது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


இந்த வழக்கின் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ என்கிற ஐயம் இருந்தது. ஆனால், அரசு தரப்பில் உறுதியாக நின்று வழக்கறிஞர்கள் வாதாடி இருக்கிறார்கள் அவர்களையும் பாராட்டுகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமின்றி மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஏற்பட்ட ஒரு கொடுங்காயத்துக்கு இடப்பட்ட மாமருந்தாகவே அமைந்திருக்கிறது. அந்த வகையில், இந்த தீர்ப்பை வரவேற்கின்றேன் பாராட்டுகின்றேன். இந்த வழக்கில் திமுக, அதிமுக, வீசிக என்று யாரும் உரிமை கூறுவதில் எந்த நியாயமும் இல்லை.  சான்றுகள் வலுவாக இருந்தது. செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்த தடையங்கள் இந்த தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தன. 


அதனால், தான் அவர்களால் தப்பிக்க முடியாமல்  இருந்தது. அவர்களால் மீள முடியாத ஆதாரங்களை அவர்களே உருவாக்கி விட்டார்கள். அந்த ஆதாரங்கள் தான் இந்த தண்டனைக்கு மிக முக்கிய வலுவான தடையாக இருந்தன. இதில் யாரும் உரிமை கூறுவதில் அர்த்தமில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி மட்டுமல்ல யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். பாலியல்  குற்றங்கள் குறித்து மாநில அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் ஆபாச வலைதள விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!

news

பாசத்தின் வாசம் (குறுங்கதை)

news

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?

news

வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!

news

24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

news

சென்னையில் எப்ப Rain சீன் தெரியுமா.. 23 டூ 30.. செம மழை இருக்காம்.. என்ஜாய் பண்ண ரெடியாகுங்க!

news

கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

கரூர் உயிரிழப்பு சம்பவம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது: சீமான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்