சென்னை: சிலர் 50,60 வயது வரை சினிமாவில் நடித்து பொருளை தேடி, சுகத்தை தேடி சொகுசாக வாழ்ந்துவிட்டு, இளமை காலத்தை சொகுசாக கழித்துவிட்டு தேவையான அளவிற்கு சொத்தையும் சேர்த்து வைத்து கொண்டு காலவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு விழா தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய் வழக்கம் போல் தனது பாணியில் மத்திய மற்றும் மாநில அரசை கடுமையாக தாக்கிப்பேசியிருந்தார். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசுகையில், விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார் என்றும், விஜய்க்கு உதவ நான் வரவில்லை. எந்த உதவியும் விஜய்க்கு தேவையில்லை. விஜய்க்கு எல்லாமே தெரியும். அவரே சாதிக்க முடியும். சாதிப்பார் என்றும் பேசியிருந்தார்.

இதுகுறித்து தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், மொத்தமாக 35 ஆண்டுகள் அரசியல் பயணம் செய்திருக்கிறோம். ஒரு மாநில கட்சி அந்தஸ்தை பெறுவதற்கே பெரும்பாடுபட நேர்ந்தது. சிலர் 50,60 வயது வரை சினிமாவில் நடித்து பொருளை தேடி, சுகத்தை தேடி சொகுசாக வாழ்ந்துவிட்டு, இளமை காலத்தை சொகுசாக கழித்துவிட்டு தேவையான அளவிற்கு சொத்து சேர்த்து வைத்து கொண்டு காலவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள்.
சினிமாவில் இருப்பதினால் அவர்கள் உடனடியாக கட்சி ஆரம்பிக்கலாம். அவர்கள் ஊர் ஊராக இப்படி சென்று அலைய வேண்டியதில்லை, கொடியேற்ற தேவையில்லை, ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து பேச தேவையில்லை. உடனடியாக கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கலாம். ஆனால் நான் என்னுடைய இளமை காலத்தை தொலைத்து தூங்காமல், சாப்பிடாமல், ஓய்வெடுக்காமல், பொழுதுபோக்கு இல்லாமல், விடுமுறை இல்லாமல், சுற்றுலா செல்லாமல், நல்ல சாப்பாடு கூட சாப்பிடாமல் 35 ஆண்டுகள் பாடுபட்டிருக்கின்றேன். இப்படி கஷ்டப்பட்டு தான் இந்த இடத்தை அடைந்திருக்கின்றோம்.
இந்த மாநில அந்தஸ்தை பெறுவதற்காக வாழ்க்கையில் எவ்வளவோ இழந்திருக்கிறோம். அப்படியிருந்தும் நம் வளர்ச்சியை பிடிக்காமல் சாதி வெறிபிடித்த கும்பல், விசிக கொடிக் கம்பத்தை வெட்டி சாய்க்கிறார்கள். மத வெறி பிடித்த கும்பல் நமக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் பத்திரிகையாளர்கள் என்னை அடிக்கடி கேட்கும் கேள்வி நீங்கள் ஏன் முதல்வர் ஆவேன் என்று கூறுவதில்லை என்று கேட்கிறார்கள். நான் இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். புதுசு புதுசா வந்தவர்கள். இந்த நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உழைக்காதவர்கள். திடீரென வந்தவர்கள் எல்லாம் தாங்கள் முதலமைச்சராக வருவோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். முதலமைச்சர் பதவி என்பது மக்களால் வழங்கக்கூடிய பதவி. ஆனால் இவர்களாகவே முதலமைச்சராக வருவோம் என தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}