சென்னை: ஆதவ் அர்ஜூனா பேட்டியால், திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. கூட்டணியில் விரிசல் உருவாக வாய்ப்பும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக திமுகவுடனான கூட்டணியில் விரிசல் ஏற்படுத்தும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேட்டி அளித்து வருகிறார். வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் துணை இல்லாமல் திமுகவால் ஜெயிக்க முடியாது என்று அவர் கூறியது திமுக தலைவர்களை கோபப்பட வைத்துள்ளது.

அர்ஜூனா பேச்சுக்கு விசிக தலைவர்கள் சிலரே கூட கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆ. ராசாவும் இந்தப் பேட்டியைக் கண்டித்துள்ளார். திருமாவளவன் இந்தப் பேச்சை ஏற்க மாட்டார் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியிரு்நதார்.
இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆதவ் அர்ஜூனாவின் பேட்டியால் திமுகவுடனான உறவில் எந்த விரிசலும் ஏற்படாது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறுகையில், திமுக-விசிக ஆகிய இரண்டு கூட்டணி கட்சிகளுக்கு இடையில் எந்தவித சலசலப்பும் இல்லை. விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாகுவதற்கு வாய்ப்புகளும் இல்லை. என்னுடைய ஊடகப் பக்கத்தில் பதிவான வீடியோவில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்து பதிவிடப்பட்டது. இந்த கருத்தை பல்வேறு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அது மேலும் மேலும் விவாதத்திற்கு இடமளித்து விட்டது.
அது திமுக மற்றும் விசிக இடையில் எந்தவித சிக்கலும் ஏற்படுத்தாது. கட்சியின் முன்னணி தோழர்கள் உடன் உட்கட்சி விவகாரங்களை கலந்து ஆலோசித்து தான் எந்தவித முடிவும் எடுப்போம். ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருடன் தொலைபேசி வழியாக பேசியிருக்கிறேன். மீண்டும் நாங்கள் கலந்து பேசி அது தொடர்பான முடிவுகளை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}