நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்

Mar 20, 2025,05:42 PM IST
சென்னை: நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி முதலில் பாமகவில் இருந்தார். அதன்பின்னர் 2020ம் ஆண்டு பாஜவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த அவருக்கு ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் நாதக சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.



அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்த வித்யா ராணிக்கு தற்போது, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் நாதகவில் இருந்து மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த வழக்கறிஞர் ஞானசேகரன் அக்கட்சியில்இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அந்த பொறுப்பு தான் தற்போது வித்யாராணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, 207வது வாக்ககத்தைச் சேர்ந்த வித்யா வீரப்பன், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். இவரைத்தொடர்ந்து விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் என்பவரையும் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார் சீமான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

news

ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு

news

திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்

news

PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ

news

'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு

news

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?

news

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

news

போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்