- அ. வென்சி ராஜ்
நேற்று ஒரு தோட்டத்தில் இதை பார்த்ததும் புகைப்படம் எடுத்துவிட்டேன்....
துளிர்த்தது மரத்தின் அடி தண்டு மட்டுமல்ல.... என் மனதின் வார்த்தைகளும் தான்...
வெட்டிய இடத்தில் துளிர் விடுவது மரத்தின் தனிச்சிறப்போ...
துளிர் என்பது மரத்தின் உச்சியில் மட்டுமல்ல.. கீழ்கட்டையிலும் தளிர்த்திடுவேன் என கருத்து சொல்கிறதோ..
வேர் மட்டும் இருந்தால் கூட விருட்சமாய் எழுந்திடுவேன் என மனித குலத்திற்கு சொல்லுகிறதோ ...
வெட்டுகிற மனிதனையே மன்னித்து, மீண்டும் விருட்சமாகி கனி தந்து விருந்து வைத்து மன்னிப்பின் இலக்கணம் பேசுகிறதோ....

முதல் தோல்வியிலே முற்றும் துவண்டு விடும் நமக்கு வேர்வரை வெட்டினாலும் மீண்டெழுவேன் என வகுப்படுகிறதோ....
எது எப்படியோ...
மரங்கள் எப்பொழுதுமே எல்லா நிலையிலும் நமக்கு வகுப்பெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன....
மரம் வளர்ப்போம்!
மனிதம் துளிர்ப்போம்!
(அ. வென்சி ராஜ்... திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பட்டுடையானிருப்பு, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}