- அ.வென்சி ராஜ்
நம்முள் இருக்கும் மனம்...
மனம் எத்துனை ஆழம் என்பது புரியுமா?
கடவுளின் கைகளில் இருக்கும் அழகான பூச்செண்டு தான் மனம்...
புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு புதிர் அல்ல மனம்...
புரிந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு
என்றுமே புரியாத புதிர் தான் மனம்....

விரும்புகிறவர்களுக்கு விருச்சிக மரம் ...
பாசம் வைப்பவர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் . ..
பாதகம் செய்பவருக்கு பாதை காட்டும் பலகை ..
தேடுகிறவர்களுக்கு திகட்டாத புதையல் ...
தொலைத்து விட நினைப்பவர்களுக்கு தொலைதூர கானல் நீர் ...
அன்புக்கு என்றுமே அடிமை...
அடக்குமுறைக்கு அப்பாற்பட்டது...
மொத்தத்தில்.
நான் என்ற அகந்தை இல்லாமல். ..
நான்தான் என்ற கர்வம் கொள்ளாமல். . .
நாம் நாமாகவே இருக்கும் வரை...
நல்லவள் தான் நம் மனம்.....
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)
அமெரிக்காவில் குடும்பச் சண்டையில் விபரீதம்.. 3 பேருக்கு ஏற்பட்ட கதி.. பரபரப்பு சம்பவம்!
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
சந்தோஷம்!
அமைதி, ஆரோக்கியம், செழிப்பு.. நேர்மறை ஆற்றலுக்கு வித்திடும்.. துளசி மாடம்!
நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!
உன் புன்னகை!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}