"எஸ்.ஜே. சூர்யா - தனுஷ்".. டெட்லி காம்போ.. இப்பவே எகிறுதே.. ரசிகர்கள் Goosebumps moment!

Feb 22, 2024,03:10 PM IST

- அஸ்வின்


சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் கமிட் ஆகியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் வேற லெவல் டிரீட்டை தனுஷ் திட்டமிட்டிருக்கிறாரோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


இயக்குநராக வலம் வந்த எஸ்.ஜே. சூர்யா  நடிகர் ஆனதற்கு பின்பு அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அவர் ஏற்று நடித்த "இறைவி" திரைப்படத்தின் கதாபாத்திரம். இறைவி திரைப்படத்தில் பல முன்னணி கதாபாத்திரங்கள் இடம் பெற்று இருந்தாலும் இவரது கதாபாத்திரம் மட்டும் தனித்து நிற்கும். பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடித்து தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் எஸ்.ஜே.சூர்யா. அவர் நடித்த அந்த "கேரக்டர் ஆர்டிஸ்ட்" கதாபாத்திரம் அனைவரையும் வித்தியாசமான ஒரு கோணத்தில் ரசிக்க வைத்தது.




பார்ப்பதற்கு மிகவும் புது விதமான ஒரு அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. இறைவி படத்திலிருந்துதான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து அது போலவே நடித்தும் வருகிறார். இப்பொழுது தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்கப் போகிறார். அந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய வேடத்தை ஏற்று நடிக்கவுள்ளார். இதுதொடர்பான போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. அந்த போஸ்டரில், "அரகண்ட்" ஆன லுக்கில் இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இவரது லுக்கே இப்படி இருக்கு என்றால் தனுஷ் இந்தப் படத்தில் எப்படி நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.


ஏற்கனவே வெளியான தனுஷ் தோற்றம் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் ஸ்டைலிஷ் தோற்றம் ஆகிய இரண்டுமே, ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் சூர்யாவை, தனுஷ் எப்படி காண்பிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது. எஸ்.ஜே.சூர்யா சமீப காலமாகவே தான் நடிக்கும் படங்களில் அதகளமாக நடித்து வருகிறார். அனைவரின் கவனத்தையும் அவரது கதாபாத்திரங்கள் ஈர்த்து வருகின்றன. அவரது அத்தனை படங்களிலுமே அவர் தனித்துத் தெரிவார். 




தற்போது இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்திலும் எஸ்.ஜே. சூர்யா இருக்கிறார். இதன் காரணமாகவே இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதில் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரம் எப்படி இருக்க போகிறது என்று அதுவும் நம்மை எதிர்பார்க்க வைக்கிறது. இப்படி அவர் செய்து வரும் திரைப்படங்களும், செய்த திரைப்படங்களும் நம்மை திரும்பத் திரும்பி பார்க்க வைக்கிறது.


தனுஷும், எஸ்.ஜே.சூர்யாவும் ஒரே ஸ்கிரீனில் வரப்போகிறார்கள் என்று நினைத்தாலே அது மிகவும் கூஸ்பம்ஸ்ப் மொமென்ட்டாக ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். எது எப்படி இருந்தாலும் ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, தனுஷ் காம்போ டெட்லியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்