சாமி பட வில்லன் நடிகர்.. கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

Jul 13, 2025,04:08 PM IST

ஹைதராபாத்: தென்னிந்திய திரையுலகின் மூத்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவரான கோட்டா சீனிவாச ராவ், தனது 83வது வயதில் இன்று (ஜூலை 13, 2025) காலமானார். 


வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அதிகாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஆந்திராவைச் சேர்ந்த கோட்டா சீனிவாச ராவ், 1978 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான 'பிரணம் கரீடு' மூலம் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வில்லன், குணச்சித்திர வேடங்கள், நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் என எந்த வேடமானாலும் தனது தனித்துவமான உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.


தமிழிலும் பிரபலம்




தமிழில் 2003 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமி' படத்தின் மூலம் 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தமிழக ரசிகர்களிடையே பெரும் பிரபலமானார். 


அதன் பின்னர் நிறையத் தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். 'குத்து', 'ஜோர்', 'ஏய்', 'திருப்பாச்சி', 'பரமசிவன்', 'சத்யம்', 'கோ', 'சாமி 2', 'காத்தாடி' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றார். அதிலும் அழகுராஜா படத்தில் அவர் நடித்த கேரக்டர் வெகுவாக பேசப்பட்டது.


விருதுகளும் அங்கீகாரமும்:


கோட்டா சீனிவாச ராவ் தனது நடிப்புத் திறமைக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் (2015), ஆந்திர அரசின் 9 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.


நடிப்பு மட்டுமல்லாமல், அரசியலிலும் கோட்டா சீனிவாச ராவ் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1999 முதல் 2004 வரை ஆந்திராவின் விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும்  பணியாற்றியுள்ளார்.


கோட்டா சீனிவாசராவுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவரது ஒரே மகன் ஆஞ்சநேய பிரசாத், 2010 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரை பெரிதும் பாதித்தது. அதன்பிறகு படங்களில் நடிப்பதை சற்றுக் குறைத்துக் கொண்டார்.


கோட்டா சீனிவாச ராவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது கலைப்பயணமும், ரசிகர்களின் மனதில் அவர் விட்டுச்சென்ற தடமும் என்றும் நிலைத்திருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சசிகலா வெளியிட்ட அறிக்கை.. ஆடிப்போன அதிமுக.. எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு ஆபத்தா?

news

பிக்பாஸ் தமிழ் 9.. அடுத்த சீசனைக் கண்டுகளிக்க ரெடியா மக்களே.. இன்று முக்கிய அறிவிப்பு

news

விஜய்யுடன் கூட்டணி குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஓபன் பதில்!

news

தமிழகத்தில் இன்று முதல் செப்., 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 620 பேர் பலி!

news

Hello September .. செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. எவ்வளவு ஸ்பெஷல் இருக்கு தெரியுமா!

news

ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்விற்கும் தகுதி தேர்வு கட்டாயம்: உச்சநீதிமன்றம்!

news

காஞ்சனா 4.. பேய்ப் படத்தில் ராஷ்மிகா.. ராகவா லாரன்ஸின் அடுத்த அதகளம் ரெடி.. வேற லெவல் பிளான்!

news

ரஜினியைத் தொடர்ந்து இவருடன் இணைய ஆசைப்படுகிறேன்.. நெல்சன் வெளியிட்ட ஆசை!

அதிகம் பார்க்கும் செய்திகள்