சென்னை: நடிகர் மதன்பாப் காலமானார். அவருக்கு வயது 71. புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை காலமானார்.
சென்னையைச் சேர்ந்த மதன்பாப் ஒரு இசைக் கலைஞர், காமெடியன் என பல்வேறு அவதாரங்கள் கொண்டவர். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர். பாலுமகேந்திராவின் நீங்கள் கேட்டவை படம்தான் இவரது முதல் படம். ஆனால் இயக்குநர் கே.பாலச்சந்தரால் இவரது தனித்துவமான காமெடித் திறமை அடையாளம் காணப்பட்டு வெள்ளித் திரையில் பிரபலமானார்.
சினிமாவில் அவர் பிரபலமாக அவரது சிரிப்புதான் முக்கியக் காரணம். தனித்துவமான சிரிப்பு மற்றும் காமெடியால் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். சிரிப்புக்காகவே பிரபலமான குமரிமுத்து போல, மதன் பாப்பின் சிரிப்பும் தனித்துவமானதாக இருந்ததால் அவர் வேகமாக பிக்கப் ஆகி விட்டார்.

வானமே எல்லை, தெனாலி, தேவர் மகன், பிரண்ட்ஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் மதன் பாப். மதன்பாப் மற்றும் வடிவேலு இடம் பெற்ற பல படங்களில் அவருக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்தது. அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
அவரது உடல் அடையாறில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் மதன் பாப் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!
கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!
{{comments.comment}}