சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது வீட்டின் முன்பு கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என்று எந்த விசேஷமாக இருந்தாலும் சரி அந்த நேரத்தில் ரஜினிகாந்த்தின் சென்னை போயஸ் தோட்டத்து வீட்டு முன்பு ரசிகர்கள் அவரை சந்திக்க திரண்டு விடுகிறார்கள். ரஜினிகாந்த் ஊரில் இருந்தால் வெளியில் கேட்டுக்கு அருகே நின்று ரசிகர்களை சந்திக்கிறார்.

அந்த வகையில் இப்போதும் பொங்கல் வாழ்த்து சொல்வதற்காக ரஜினி வீட்டு முன்பு ரசிகர்கள் கூடியிருந்தனர். பெரும் திரளாக கூடியிருந்த ரசிகர்களைப் பார்ப்பதற்காக வெளியே வந்தார் ரஜினி. கேட்டுக்கு வெளியே நின்று தொண்டர்களைப் பார்த்து கை ஆட்டி மகிழ்ந்தார். ரசிகர்களும் தலைவா தலைவா என்று நாடி நரம்பு புடைக்க கத்தி வாழ்த்துக் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசுகையில், அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள். அனைவரும் ஆரோ்கியத்துடனும் மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும். நன்றி என்று கூறினார் ரஜினிகாந்த்.
வேட்டையன்.. ஸ்பெஷல் வாழ்த்து போஸ்டர்

இதற்கிடையே, வேட்டையன் படக் குழுவினர் பொங்கலையொட்டி சிறப்பு வாழ்த்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்த் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தபடி படு ஸ்டைலிஷாக அதில் காட்சி தருகிறார். மறுபக்கம் கூலர் அணிந்தபடி ஆக்ரோஷமான முகத்துடன் கூடிய ரஜினிகாந்த்தும் அதில் இடம் பெற்றிருக்கிறார்.
இந்த ஸ்டில் ரசிகர்களைக் கவர்ந்திழுத்துள்ளது. ரஜினியின் தரிசனம் மற்றும் வேட்டையன் தரிசனம் என் டபுள் பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது ரஜினி ரசிகர்களுக்கு. ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள லால் சலாம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதைத் தொடர்ந்து வேட்டையான் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் இது. இப்படத்தை ஜெய் பீம் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். லைக்கா படத்தைத் தயாரித்துள்ளது. பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் கூடிய இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது என்பது நினைவிருக்கலாம்.
வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
{{comments.comment}}