டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் (துணை ஜனாதிபதி) தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 452 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் பி. சுதர்சன் ரெட்டியும், இத்தேர்தலில் போட்டியிட்டர். ஜெகதீப் தன்கர் ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்ததால் இந்த தேர்தல் நடந்தது.

சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ். பாஜகவில் தீவிரமாக ஈடுபட்டவர். முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் எம்.பி. என பல பதவிகளை வகித்தவர். ஆளுநராகவும் இருந்துள்ளார். தற்போது மகாராஷ்டிராவின் கவர்னராக இருக்கிறார். சுதர்சன் ரெட்டி உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. இந்த முறை இரு வேட்பாளர்களும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வாக்குப் பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் electoral college-ல் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் இடம்பெற்றனர். மேலும் ராஜ்யசபாவின் நியமன உறுப்பினர்களும் electoral college-ல் இடம் பெற தகுதியுடையவர்கள். எனவே, அவர்களும் தேர்தலில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் காலை தொடங்கி நடைபெற்ற வாக்குப் பதிவு மாலையில் முடிவடைந்தது. இதையடுத்து 15வது துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தலின் முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மொத்தம் 452 ஓட்டுக்கள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளரான பி.சுதர்சன ரெட்டி 300 ஓட்டுக்கள் பெற்று தோல்வியைச் சந்தித்தார்.
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
{{comments.comment}}