சென்னை: விடுதலை படம் வெற்றி பெற்ற நிலையில், விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி வேற லெவல் ஆவேசம் காட்டியுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் ஏற்கனவே பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை, உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி மக்களிடையே பாராட்டு பெற்றவர். இதனைத் தொடர்ந்து கடந்த 2003 ஆம் ஆண்டு விடுதலைப் படத்தை இயக்கினார். இதுவரை ஒரு காமெடியனாக தமிழ் சினிமாவில் வலம் வந்த சூரி விடுதலை படத்தின் மூலம் நாயகனாக அவதாரம் எடுத்தார். இப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
முன்னணி கதாபாத்திரத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் இப்படம் வெளிவந்து மக்களிடையே பாராட்டு பெற்றது. இவர்களுடன் சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன், இளவரசு, பவானி ஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும் இளையராஜாவின் இசையில் விடுதலைப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மேலும் விடுதலை படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வெற்றி பெற்ற நிலையில், விடுதலை இரண்டாம் பாகமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் புன்னகையுடன் கூடிய ரொமான்டிக்கான போஸ்டரும், விஜய் சேதுபதி கையில் அருவாளுடன் முகம் முழுவதும் ரத்தத்துடன் இருக்கும் போஸ்டரும் வெளியாகி உள்ளன. இது மட்டுமல்லாமல் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார் என்ற திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}