ஹனோய்: வியட்நாமைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 1 லட்சத்து 4 ஆயிரத்து 214 கோடியே 18 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்து சிக்கியுள்ளார். அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்படவுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.
வியட்நாமைச் சேர்ந்தவர் டிருவோங் மை லான். மிகப் பெரிய தொழிலதிபர். வான் தின் பாட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரும் இவரது கூட்டாளிகள் 85 பேரும் சேர்ந்து மிகப் பெரிய பண மோசடியில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர். வியட்நாமை இந்த வழக்கு பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் செய்த குற்றத்துக்காக இவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோர்ட்டே கடும் கோபத்துடன் கூறியுள்ளது.
கடந்த பத்து வருடங்களில் சைய்கான் கமர்ஷியல் வங்கியில் இந்த அளவுக்கு பணத்தை சுருட்டியுள்ளது இந்த கும்பல். மொத்தம் 85க்கும் மேற்பட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர்கள் மீதான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.. அனேகமாக இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படலாம் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் டிருவோங் மை லான் தவிர முன்னாள் இன்னாள் வங்கி அதிகாரிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் என பலரும் சிக்கியுள்ளனர். மிகப் பெரிய அளவில் நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு நாட்டையே அதிர வைத்துள்ளார்கள்.
அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், வங்கி விதிகளை மீறியது உள்ளிட்ட புகார்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. தன் மீதான புகாரை மை லான் மறுத்துள்ளார். தனக்குக் கீழ் உள்ளவர்கள்தான் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இவர்தான் அத்தனை மோசடிகளுக்கும் மூளை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். மை லானுக்கு மரண தண்டனைதான் தர வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர். கோர்ட்டும் கூட மிகக் கடுமையான தண்டனைதான் சரியானது என்று கருத்து தெரிவித்துள்ளது.
மை லான் கைது செய்யப்பட்டு அவரது முறைகேடுகள் வெளியானதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஹனாய் நகரில் போராட்டத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}