சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய்க்கு இன்று 50வது பிறந்த நாள். விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் நடக்கும் முதல் பிறந்த நாள் இது. அவருக்கு பல்வேறு தலைவர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் வரும் முதல் பிறந்த நாள் என்பதாலும், கோட் படம் வெளியாகவுள்ளதாலும், இந்த முறை பிறந்த நாளை தடபுடலாக கொண்டாட வேண்டும் என்று ரசிகர்களும் தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தால், தனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை என்று விஜய் அறிவித்தார்.
ஆனாலும் ரசிகர்கள் விடவில்லை. பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். முக்கிய பிரமுகர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர்
நடிகர் விஜய் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய் அவர்கள், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி!
காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
இயக்குனர் வெங்கட் பிரபு
தி கோட் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு happy birthday அண்ணா... ஐ லவ் யூ அண்ணா என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}