சென்னை: கோட் படத்தின் மிகப் பெரிய வெற்றியால் ஏற்பட்டுள்ள உற்சாகம் ஒரு பக்கம்.. தவெக மாநில மாநாட்டு ஏற்பாடுகள் மறுபக்கம் என விஜய் படு பிசியாக உள்ளார். இதற்கு நடுவில் இன்று அமைதியான முறையில், விஜய் நடிக்கும் 'விஜய் 69'படத்தின் பூஜை நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். கிங் ஆப் கலெக்ஷனாகவும் வலம் வருகிறார். இவ்வளவு உச்சத்தில் இருக்கும் விஜய், யாரும் எதிர்பாராத வகையில், கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியினை ஆரம்பித்தார். அன்றே கையில் உள்ள படங்களை முடித்த பின்னர் 2026 தேர்தல் சமயத்தில் முழுமையாக அரசியலுக்கு வருவேன் என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பிரம்மாண்ட மாநாடு இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த விழா சாதாரண அரசியல் நிகழ்வாக இருக்கக் கூடாது என்றும் மக்களுக்காக உழைக்கக்கூடிய கட்சியாக நமது கட்சி மாறும் என்கிற நம்பிக்கையை விதைக்கும் விழாவாக மாற வேண்டும் என நடிகர் விஜய் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
மறுபக்கம் இன்றே இன்னொரு நல்ல விஷயமும் நடந்துள்ளது. அதுதான் விஜய் 69 படத்தின் பூஜை. தவெக கட்சி மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் பூஜையும், விஜய்யின் 'விஜய் 69' படத்திற்கான பூஜையும் நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு பூஜைகளும் ஒரே நாளில் நடந்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாக உள்ள 'விஜய் 69' படத்திற்கான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக 'விஜய் 69' படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. 'விஜய் 69' படத்தில் பிரபல நடிகர் பாபி தியோல் வில்லனாகவும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் இணைந்துள்ளார்.
மேலும், மலையாள இளம் நடிகை மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில், இன்றைய தினம் மேலும் சில அப்டேட்டகள் வெளியாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. 'விஜய் 69'படத்திற்கு சென்னையில் செட் அமைக்கப்பட்டு பூஜா ஹெக்டேவுடன் பாடல் காட்சி ஒன்றையும் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்திவ் ரீமேக் தான் தளபதி 'விஜய் 69' படத்தின் கதை என்றும் சொல்லப்படுகிறது. ஆக மொத்தம் தனது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ட்ரீட் கொடுத்தபடி இருக்கிறார் விஜய்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}