சென்னை: உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 படம் குறித்த அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏஜிஎஸ் என்டர்டென்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது. நடிகர் விஜய் அப்பா மகன் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் சினேகா, பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதே சமயம் படம் வெளியாகி ஐந்து நாட்களில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. குறிப்பாக இப்படத்தில் கேப்டன் விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் காட்சிப்படுத்தியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான எச் வினோத் இயக்கத்தில் விஜய் 69 படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படமே விஜய்யின் திரை வாழ்க்கையில் கடைசி படம். இதனால் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும்.. இப்படத்தின் நடிகர் நடிகை யார் யார் ..என்பது தொடர்பாக இப்பொழுதே ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அப்படத்தின் கே.என் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. படம் குறித்த எதிர்பார்ப்புகளும், பேச்சுக்களும் இன்றிலிருந்தே தொடங்குவதாகவும் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}