விக்கிரவாண்டி: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... என்ற கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் கொடி பாடலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்சியின் சார்பில் அதன் பொருளாளர் உறுதிமொழியை வாசிக்க விஜய் உள்ளிட்ட அனைவரும் அதை ஏற்றனர்.
தவெக உறுதிமொழி
நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை சகோதரத்துவம், மத நல்லிணக்கணம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன்.
மக்களாட்சி, மதசார்பின்மை, சமூகம் நீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவைகளாக கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். ஜாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன் என உளமார உறுதி கூறுகிறேன் என உறுதி மொழி ஏற்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}