- அஸ்வின்
சென்னை: நேற்று நடிகர்.. இன்று தலைவர்.. நாளை தமிழ்நாட்டின் முதல்வர் என்று விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் மாநிலம் அவரது பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று விஜய் அறிவித்துள்ள போதிலும் கூட கோவிலில் தங்கத் தேர் இழுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் பிறந்த நாளையொட்டி அவரைப் பற்றிய ஒரு ரவுண்டப்..

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராயம் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நேரில் சென்று விசாரித்த விஜய் அவர்களுக்கு ஆறுதலளித்துள்ளார். இந்த துயரச் சம்பவம் காரணமாக, பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். சமூகத்தின் மீது விஜய் விழிப்புணர்வோடு இருக்கிறார், சமூகத்தின் மீது அக்கறையோடு இருக்கிறார் என்பதையே இது உணர்த்துவதாக ரசிகர்கள் சொல்கிறார்கள். இவர் நாளை அரசியல்வாதியாக மாறும்போது, மிகச் சிறந்த எடுத்து காட்டாக இருப்பார் என்றும் ரசிகர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.
ஸ்டெர்லைட் விஷயத்திலும், ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் இவர் நடந்து கொண்ட விதம் இன்று வரை மக்கள் மனதை விட்டு அகலவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனி ஒரு மனிதராக சத்தம் இல்லாமல் இளைஞர்களோடு அருகே அமர்ந்து அந்தப் போராட்டத்தை ஆதரித்தார். இதுபோன்று சமூகத்தின் மீது அதிகமான ஒரு கவனம் இவருக்கு எப்பொழுதும் இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தை இவர் ஆரம்பித்ததற்கு காரணமும் அதுதான். இளைஞர்களை நல்ல பாதையில், நகர்த்த வேண்டும். இளைஞர்களை வழிநடத்த வேண்டும் என்பதே இவரது நோக்கம்.
தமிழ்நாட்டு மக்களுக்கு இப்பொழுது நல்ல தலைவர் வேண்டும் என்பதே பலரின் ஏக்கமாக உள்ளது. அதை இவரும் அறிந்ததே அந்த நல்ல தலைவராக தான் விளங்க, உருவெடுக்கும் நோக்கில் மக்களை கவர முயற்சித்து வருகிறார். மக்களை கவர மட்டும் இல்லாமல் மக்களுக்கு என்ன என்ன மாதிரி நன்மைகளை செய்ய வேண்டும் என்றும் நாள்தோறும் யோசித்து அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அதை பிரதிபலிக்கிறார்.
தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் வதந்திகளையும் விஜய் ஒரு சேர எடுத்து்க கொள்கிறார். எதற்கும் கோபப்படாமல், நிதானமாக நடந்து கொள்வதிலும், தனது மெளனத்தால் அனைத்திற்கும் பதில் சொல்கிறார். அது அவரது தனி சிறப்பாக மாறியுள்ளது. மௌனம் என்பதே அவருக்கு ஒரு மிகப்பெரிய ஒரு ஆயுதம். அது அவருக்கு பல இடங்களில் கை கொடுத்து இருக்கிறது. இதுதான் அவரது வெற்றியின் உச்சத்தை தொட்ட அந்த ரகசியம்.
இன்றைய விஜய் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் நள்ளிரவில் கோட் படத்தின் கிளிம்ப்ஸ், மாலையில் 2வது சிங்கிள் என்று தடபுடலாக, டபுள் ட்ரீட்டுடன் கொண்டாடுகின்றனர். விரைவில் விஜய் தனது அரசியல் மாநாட்டைப் பற்றி அறிவிப்பார் என்ற பெருத்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}