சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயரை அறிமுகப்படுத்தி கட்சி தொடங்கியுள்ள விஜய்யையும், கட்சியையும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், வெடி வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர். 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பிறந்தவர். இவர் அரசிலுக்கு எப்போது வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்பை இன்று நிறைவேற்றியுள்ளார் நடிகர் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பெயரை இன்று அறிவித்துள்ளார்.
கடந்த 25ம் தேதி சென்னையை அடுத்த பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய், ஆலோசனை நடத்தினார். வருகிற தேர்தல் குறித்து ஆலோசனை நடந்ததாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், டெல்லி சென்று புஸ்ஸி ஆனந்த் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து விட்டு வெளியே வந்த உடன் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள விஜய்யின் பண்ணை வீடு இனி கட்சியின் தலைமை அலுவலமாக செயல்படும் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். டிவிகே விஜய் என்ற பெயரில் தனியாக சமூக வலைதளக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் முதல் பதிவாக கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எப்போ? எப்போ? என்று ரசிகர் காத்திருந்த சூழலில் விஜய் கட்சி பெயர் அறிவித்ததை விஜய் ரசிகர்கள் உச்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.தமிழகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் பொதுமக்கள் அனைவர்களையும் அழைத்து இனிப்பு வழங்கியும். வருங்கால முதல்வர் வாழ்க! தளபதி வாழ்க! என்று கோஷங்கள் இட்டு கொண்டாட்டி வருகின்றனர். ரசிகர்கள் கோவில்களில் வழிபாடு செய்து சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் வருங்கால முதல்வர். தமிழகத்தின் விடியலின் தலைவர். 2026ம் ஆண்டின் முதல்வர். எங்கள் தளபதி என்று கேக் வெட்டி விஜய்யின் படத்திற்கு ஊட்டியும் கொண்டாடி வருகின்றனர். 28 ஆண்டாக நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். திரையுலகில் போட்டியை ஜெயித்தது போல அரசியலிலும் ஜெயிப்பார் என்று கூறியுள்ளனர் விஜய் ரசிகர்கள். மக்களாக இருந்து நலத்திட்ட உதவிகளை செய்து வந்தோம். இனி கட்சியாக மாறி செயல்படுவோம் என்று மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}