சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பனையூர் கட்சி அலுவலகத்தில் வைத்து விஜய் கொடிக் கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்ததாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
விஜய் ஏற்றிய கொடியானது மஞ்சள் நிறத்தில் உள்ளது. நடுவே விஜய்யின் சிரித்த முகம் காணப்படுகிறது. வேறு எந்த அடையாளமும் இந்த கொடியில் இடம் பெறவில்லை. முன்னதாக வாகை மலர் இடம் பெறப் போகிறது என்றெல்லாம் கூறப்பட்டது. ஒரு வேளை இதுதான் கொடியா அல்லது ஒத்திகைக்காக மட்டும் இதை ஏற்றிப் பார்த்தார்களா என்று தெரியவில்லை.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து தமிழ்நாட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அவரும் தனது தீவிர அரசியல் களத்திற்கு நெருங்கி வந்து விட்டார். கோட் படத்தை முடித்து விட்ட விஜய், மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பிறகு அவர் தீவிர அரசியலுக்குத் திரும்புகிறார். இந்த நிலையில் வருகிற 22ம் தேதி கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்யவுள்ளார்.
இந்தக் கொடி குறித்தும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு விஜய் வந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் வந்திருந்தார். அவர் முழுக்க முழுக்க மஞ்சள் நிற உடையில் வந்திருந்தார். இதுவே பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எதையோ உணர்த்துகிறாரே என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே, பனையூர் அலுவலகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் ஒரு கொடி மெல்ல உயர்ந்து பட்டொளி வீசிப் பறந்தது.

மஞ்சள் நிறத்தில் அந்தக் கொடி இருந்தது. கொடியின் நடுவே விஜய்யின் முகம் இருந்தது. இரண்டு முறை இந்தக் கொடி ஏற்றி இறக்கப்பட்டது. கருப்பு நிற உடையில் இருந்த விஜய்தான் கொடியை ஏற்றி இறக்கி ஒத்திகை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்தக் கொடியேற்றம் விஜய் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. இதுதான் கட்சிக் கொடியா என்ற பேச்சும் கிளம்பியுள்ளது. உண்மையிலேயே இதுதான் கொடியா அல்லது டம்மி கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எது எப்படியோ இந்தக் கொடி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டது. விஜய் ரசிகர்கள் படு வேகமாக இதை பரப்பி வருகின்றனர்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}