"நான் ரெடிதான்.. அண்ணன் நான் வரவா வரவா".. அடுத்த அதிரடிக்கு தயாராகும் விஜய்!

Aug 01, 2023,05:00 PM IST
சென்னை : மாணவர்களை தொடர்ந்து வழக்கறிஞர்கள் அணியும் துவங்கி, அரசியல் என்ட்ரிக்கு அடுத்த அடியை முன்னெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். இதனால் விஜய் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

விஜய் நடித்த லியோ படம் அக்டோபர் மாதம் தான் ரிலீசாக உள்ளது. அதற்கு முன் தளபதி 68 பட அப்டேட்டை எதிர்பார்ப்பதை விட விஜய்யின் அடுத்த அரசியல் மூவ் என்ன என்பதை தெரிந்து கொள்ள தான் அனைவரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இதை விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரமே கவனிக்க துவங்கி உள்ளது. சமீபத்தில் தொகுதி வாரியாக பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களை சென்னைக்கு அழைத்து பேசி, தனது அரசியல் என்ட்ரிக்கு அழுத்தமான அடித்தளம் அமைத்தார் விஜய்.



தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் புதிதாக வழக்கறிஞர் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. சென்னையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வழக்கறிஞர்கள் பிரிவின் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பொதுசெ செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதுவரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசவை கூட்டம் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் தற்போது புதிய அணி உருவாக்கப்பட்டு, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மாவட்ட வாரியாகவும் வழக்கறிஞர் பிரிவு துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் அடுத்து என்ன செய்ய போகிறார் என அரசியல் கட்சிகள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தடுத்து திட்டமிட்டு ஒவ்வொரு காயாக நகர்த்தி வருகிறார் விஜய். அவர் எப்போது அரசியல் கட்சியின் பெயரை வெளியிடுவார், என்ன மாதிரியான திட்டம் வைத்துள்ளார் என்பதுதான் இப்போது அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. எப்போது அவரது அறிவிப்பு வெளியாகும் என்பதும் கூட பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்