கோட் படப்பிடிப்பிற்காக.. துபாய்க்கு பறந்த.. நடிகர் விஜய்..!

May 11, 2024,10:20 AM IST

சென்னை: கோட் படம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இப்படத்தின் படப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றார் நடிகர்  விஜய்.


வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய், தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.




ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இவருடன் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், அஜ்மல் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். டாப் ஹீரோயினாக வலம் வந்த சினேகா மற்றும் லைலாவும் நடித்து வருகின்றனர். இது தவிர யோகி பாபு, ஜெயராம், மோகன், போன்ற  நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து மக்களை கவர உள்ளர். இது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகை திரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், அதில் அவர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.


கோட் படத்தின் அப்டேட்டுகளையும் வெளியிடுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து  இயக்குனர் வெங்கட் பிரபு தொடர்ந்து கோட் பட போஸ்டர்கள் ஒன்னு, ரெண்டு, மூணு ,என்ற அடிப்படையில்   வெளியிட்டார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் 

 ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.


இந்த நிலையில் கோட்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் சில காட்சிகள் துபாயில் படமாக்கப்பட்ட உள்ளது. அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் விஜய் விமான மூலம் துபாய் புறப்பட்டு சென்றார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் கேரளாவுக்குச் சென்றார். அங்கு ரசிகர்களை விஜய் சந்திப்பார் எனவும் கூறப்பட்டது. அப்போது கேரளா ரசிகர்கள் பெருத்த ஆரவாரத்துடனும் அவரை வரவேற்றனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்