எல்லாம் சேஃபா இருங்கப்பா.. மக்கள் இயக்க நிர்வாகியிடம் போனில் அட்வைஸ் கொடுத்த விஜய்!

Dec 08, 2023,04:49 PM IST

சென்னை: மிச்சாங் புயல் மழைவெள்ள நிவாரணப்பணிகள் குறித்து விஜய் மக்கள்  இயக்க நிர்வாகியிடம் தொலைபேசியில் விசாரித்துள்ளார் நடிகர் விஜய்.


மிச்சாங் புயல் காரணமாக வரலாறு காணாத மழைப் பொழிவு சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் ஏற்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதித்தன. இங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கிட விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


நடிகர் விஜய் படப்பிடிற்காக வெளிநாட்டில் உள்ளார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். வேண்டுகோளை ஏற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நிவாரண உதவிகளை முழு வீச்சில் செய்து வருகின்றனர். அது குறித்து இன்று போனில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார் விஜய்.




விஜய் : எல்லாம் சேபா இருக்கா

நிர்வாகி: எல்லாரும் சேபா தாண்ணா இருக்கோம். கீழ தண்ணி இருக்குனா தளபதிக்காக ஆபீஸ் ஓபன் பண்ணி இருக்கோம் அண்ணா... அதுல எல்லாரையும் தங்க வைச்சிருக்கோம்னா

விஜய்: இந்த நிலமையில  கூட நீங்க இதெல்லாம் பண்ணீட்டு  இருக்கீங்கபா. ரொம்ப நன்றி. 

நிர்வாகி: தாங்ஸ்னா

விஜய்: உங்க சேப்டிய பார்த்துக்கோங்க

நிர்வாகி: கண்டிப்பானா, கண்டிப்பானா எல்லாம் உங்களுக்காக தான்னா. நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக தானா

விஜய்: ஒகே. நா வந்ததுக்கப்பறம் உங்களை மீட் பண்றேன்பா. பீ சேப் என்று பேசியுள்ளார் நடிகர் விஜய்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்