சென்னை: புதிய பிக் பாஸுடன் விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன்று வழக்கமான எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியுள்ளது. இந்த ஷோவை ஹோஸ்ட் செய்யும் நடிகர் விஜய் சேதுபதி தனது ஸ்டைலில் நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் பல்வேறு புதிய மாற்றங்களும் இடம் பெற்றுள்ளன.
விஜய் டிவி அறிமுகப்படுத்திய ஷோக்களிலேயே மிகப் பெரிய உச்சத்தை தொட்டது என்றால் அது பிக் பாஸ் தமிழ் தான். ஹிந்திக்குக் கிடைத்த வரவேற்பு போல தமிழிலும் இந்த ஷோ மிகப் பிரபலமானது. அதற்கு முக்கியமான காரணம் கமல்ஹாசன் என்று சொல்ல வேண்டும். கமல்ஹாசன் இந்த ஷோவின் 7 தொடர்களை மிகச் சிறப்பாக நடத்தினார். சில ஷோக்களில் அவரது முடிவுகள் விவாதங்களை எழுப்பினாலும் கூட அவரது ஸ்டைலும், அவர் நடத்திய விதமும் நிச்சயம் மறக்க முடியாதவை.
இந்த நிலையில் நடப்புத் தொடரிலிருந்து விலகி விட்டார் கமல் ஹாசன். புதிய ஹோஸ்ட்டாக நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். அவரது புரோமோ வீடியோக்கள் ஏற்கனவே எதிர்பார்ப்புகளை கிளப்பியிருந்தன. இந்த நிலையில் இன்று இந்த ஷோ தொடங்கியுள்ளது.
மாலை 6 மணிக்கே நிகழ்ச்சி தொடங்கி விட்டது. விஜய் சேதுபதியை பாடகர் அறிவு குழுவினரின் அதிரடி குத்துப் பாட்டு பிரமாண்டமாக வரவேற்றது. விஜய் சேதுபதி முழுக்க ஷேவ் செய்த முகத்துடன் கோட் சூட்டில் படு ஹேன்ட்செம்மாக வந்திருந்தார். ஜாலியாக தனது ஸ்டைலில் பேசிய விஜய் சேதுபதி, பின்னர் வீட்டைச் சுற்றிப் பார்த்தார். வீட்டில் செய்யப்பட்டிருந்த பல்வேறு மாற்றங்களை சொல்லி விவரித்த அவர் சிலவற்றைப் பார்த்து ஆச்சரியமும் காட்டினார்.
இந்த முறையும் 2 வீடு கான்செப்ட் தொடர்கிறது. கன்பெசன் அறை வித்தியாசமாக இருக்கிறது. வீட்டுக்குள்ளும் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தனையும் எலிகன்ட்டாக இருப்பது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்களுக்கு மீண்டும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தர காத்திருக்கிறது பிக் பாஸ்.
விஜய் சேதுபதியை வரவேற்ற பிக் பாஸ் , அவரை எப்படி கூப்பிடுவது என்று அவரிடமே கேட்டது. உங்களோட முழுப் பெயர் விஜய் குருநாத சேதுபதி. உங்களை அப்படிக் கூப்பிடவா அல்லது எல்லோரும் கூப்பிடுவது போல சேது என்று கூப்பிடவா என்று பிக் பாஸ் கேட்க, முழுப் பேரைச் சொன்னா புரோகிராம் முடிஞ்சு போய்ரும், எனவே சேதுன்னே கூப்பிடுங்க என்று சிரித்துக் கொண்டே சொன்னார் விஜய் சேதுபதி. இதையடுத்து வெல்கம் சேது சார் என்று பிக் பாஸ் சொன்னார்.
கமல்ஹாசன் என்ற பிக் பாஸை இத்தனை காலமாக பார்த்து வந்த மக்களின் மனதில் விஜய் சேதுபதி எப்படி இடம் பிடிக்கப் போகிறார், ஷோவை எந்த ஸ்டைலில் நடத்தப் போகிறார்.. என்பது போகப் போகத் தெரியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}