சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் துவக்க விழா முடிவதற்கு முன்பே அனைவரிடமும் பாராட்டை பெற்று விட்டார் விஜய் சேதுபதி. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பிக்பாஸ் ரசிகர்களும் தற்போது விஜய் சேதுபதியின் ரசிகர்களாக மாறி, வாழ்த்து கூறி வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிறகு, அடுத்ததாக யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பிக்பாஸ் ஓடிடி வெர்ஷனை சிம்பு தொகுத்து வழங்கியதால், இனி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை அவர் தான் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
கமல், சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர். அவரிடம் அனைவருக்கும் மிகப் பெரிய மரியாதை உண்டு. அதனால் அவர் கண்டிப்புடன் இருந்தால் அனைவருக்கும் பயம் இருக்கும். ஆனால் விஜய் சேதுபதி, எப்போதுமே பக்கத்து வீட்டுக்காரர் போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவர். அவர் எப்படி இதை பிக்பாஸ் போட்டியை, போட்டியாளர்களை கையாள்வார் என்ற சந்தேகம், கேள்வி அனைவருக்குள்ளும் இருந்தது. ஆனால் நிகழ்ச்சியின் துவக்க விழாவில், அதுவும் துவங்கிய சிறிது நேரத்திலேயே அந்த சந்தேகங்களை போக்கி விட்டார் விஜய் சேதுபதி.
முதல் போட்டியாளராக வந்த ரவீந்திரனிடம், எனக்கு ஏதாவது அட்வைஸ் இருந்தால் சொல்லுங்க என மிக யதார்த்தமாக கேட்டார். அதே போல் இரண்டாவதாக தன்னுடன் மகாராஜா படத்தில் நடித்த சச்சா போட்டியாளராக வந்த போது அவரிடம், டென்ஷன் ஆகாம ரிலாக்சாக பேசு என உண்மையான மகளுக்கு சொல்வதை போல் அறிவுரை வழங்கினார். அடுத்து வந்த தர்ஷா குப்தாவிடமும் அவரது ஃபாலோவர்களை பற்றி கேட்டு, நீங்களே பெரிய செலிபிரட்டியாக இருக்கீங்களே என்றார்.
தான் ஒரு பெரிய நடிகர் என்ற ஈகோ இல்லாமல் சத்யாவிடம், உங்க கோட் சூப்பராக இருக்கு. பேசாம கோட் மாத்திக்கலாம் போல என வெளிப்படையாக பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது. இது விஜய் சேதுபதிக்கு அனைவரிடமும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
அதேசமயம், இப்ப ஜாலியா பேசுறேன்னு எடுத்துக்காதீங்க.. சீரியஸாகவும் பேசுவேன் என்றும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் குறிப்பாக உணர்த்தி அனுப்பி வைத்துள்ளார் விஜய் சேதுபதி. எனவே முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அதிரடி காட்டவும் அவர் தயங்க மாட்டார் என்று நம்பலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}