சென்னை : விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விஜய் சேதுபதி யாருக்கு ஃபேன் என்பதை அவரே கூறி உள்ளார்.
விஜய் சேதுபதி, பெரிய திரையுடன் சின்னத்திரையையும் பல ஆண்டுகளாக கையாண்டு வருகிறார். தற்போது முதல் முறையாக பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார். இவர் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் எப்படி தொகுத்து வழங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. ஆனால் துவக்க விழாவிலேயே எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளார்.
அனைத்து போட்டியாளர்களிடமும் மிக யதார்த்தமாக பேசி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். அதில் போட்டியாளர்களாக வந்த சத்யா, எப்படி நீங்க எப்பவும் யதார்த்தமாக இருக்கீங்க என பலரும் விஜய் சேதுபதியிடம் கேட்க நினைத்த கேள்வியை வெளிப்படையாக கேட்டு விட்டார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, நடிக்கிறதுக்கு தான் காசு வாங்குறோம். நிஜ வாழ்க்கையில் எதுக்காக நடிக்கணும்? என்றார். அதோடு சேர்த்து, நான் எப்போதும் அன்பாக பேச மாட்டேன் என்றும் தெளிவாக தெரிவித்துள்ளார்.
அனைத்து போட்டியாளர்களையும் அவர்களை பற்றி சொல்லி வரவேற்ற விஜய் சேதுபதி, நடிகரும், விஜய் டிவி தொகுப்பாளருமான தீபக்கை வரவேற்கும் போது மட்டும், நானே இவரோ மிகப் பெரிய ஃபேன் என்றார். பொதுவாக பெரிய நடிகர்கள் அனைவரும் தன்னை விட பெரிய நடிகராக இருக்கும் ஒருவரை தான் நான் இவரின் ஃபேன் என்பார்கள். ஆனால் விஜய் சேதுபதி, சின்னத்திரை நடிகர் ஒருவருக்கு ஃபேனாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சத்யாவிடம் கோட் நல்லாருக்கு என வெளிப்படையாக பாராட்டிய விஜய் சேதுபதி, தீபக் இடம் எப்படி நீங்க என்றும் மார்கண்டேன் போல் அப்போது இருந்து இப்போது வரை அப்படியே இருக்கீங்களே என்றும் வெளிப்படையாக கேட்டுள்ளார். இது அனைவருக்கும் பிடித்திருந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}