கோயம்பத்தூர் குசும்பை லெப்ட் ஹேன்டிலும்.. ரஞ்சித்தை ரைட் ஹேன்டிலும் கலாய்த்து விட்ட விஜய் சேதுபதி!

Oct 06, 2024,09:34 PM IST

சென்னை: விஜய் சேதுபதி தான் வேற லெவல் ஆளு என்பதை அடுத்தடுத்து ஆணித்தரமாக பதிய வைத்துக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சுக்களைப் பார்த்தால், 8வது பிக்பாஸ் சீசன் அனல் பறக்கும் என்பது உறுதியாகி வருகிறது.


கமல்ஹாசன் போய் தற்போது பிக் பாஸ் 8வது சீசனை நடத்த வந்திருக்கிறார் விஜய் சேதுபதி. கமல்ஹாசன் அளவுக்கு இவர் நடத்துவாரா என்ற டவுட் பலருக்கும் இருந்தது. ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் செய்கைகளைப் பார்த்தால் கமல்ஹாசனை விட அதிரடி காட்டுவார் போலயே என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம், ஒவ்வொரு போட்டியாளரையும் அவர் டீல் செய்யும் விதம் தனி ரகமாக இருக்கிறது.


குறிப்பாக நடிகர் ரஞ்சித்திடம் அவர் பேசிய விதம் சூப்பர் சூப்பர் என்று சபாஷ் போட வைத்து விட்டது. ரஞ்சித்தை மேடையில் அறிமுகப்படுத்திய பின்னர் அவரிடம் பேசிய விஜய் சேதுபதி, நீங்க நடிச்ச சில படங்கள் எனக்குப் பிடித்திருந்தது என்று கூறி சில படங்களைச் சொன்னார். பின்னர் இன்னொரு படம் என்று அவர் சொன்னபோது, குறுக்கிட்ட ரஞ்சித் கவுண்டம்பாளையமா என்று கேட்டபோது, இல்லல்ல என்று வேகமாகச் சொன்ன விஜய் சேதுபதி பீஷ்மர் என்று சொன்னார்.


நான் ரசித்த ரஞ்சித் நீங்க இல்லை




அது நல்ல படம்.. உங்களிடமே சொல்லியுள்ளேன் என்று கூறி விட்டு உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்.. நான் அன்னிக்கு பார்த்த ரஞ்சித் இப்போ இல்லை.. இப்ப அவர் வேற ஆளா மாறியிருக்கார். இதை உங்க கிட்ட சொல்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அந்த ரஞ்சித் நிஜமா அல்லது இப்போது மாறி நிக்கிற ரஞ்சித் நிஜமா.. நிச்சயமா நான் பார்த்து ரசித்த வியந்த ரஞ்சித்தாக இப்போது நீங்க இல்லை என்று அதிரடியாக கூறவே அதற்கு உடனடியாக பதிலளிக்க முடியாமல் தடுமாறி விட்டார் ரஞ்சித்.


பின்னர் சுதாரித்து, படிப்பினை கற்றுக் கொண்டேன் என்று கூறி சமாளித்தார். ரஞ்சித்தை, விஜய் சேதுபதி டீல் செய்த விதமும், அவரிடம் நேரடியாகவே அவரது சர்ச்சைப் படம் குறித்துப் பேசியதும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆஹா.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே என்று பலரும் விஜய் சேதுபதியைப் பாராட்டி வருகின்றனர்.


கோயம்புத்தூர் குசும்புக்கு குட்டு




அதேபோல ரஞ்சித்தின் நண்பர்கள் இருவரை அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். அதில் ஒருவர் விஜய் சேதுபதி/யிடம் சாப்ட்டீங்களா சார் என்று கேட்டார். சாப்பிட்டேன் சார் என்று கூறிய விஜய் சேதுபதி பதிலுக்கு நீங்க சாப்பிட்டீங்களா என்று கேட்டார். அப்போது அந்த கோயம்பத்தூர்காரர், எங்க ஊர்ல இதைத்தான் முதல்ல கேப்போம் சார் என்றார் அவர்.


அதைக் கேட்ட விஜய் சேதுபதி ஒரு செகன்ட் கூட யோசிக்காமல், எங்க ஊர்லயும் கேப்போம் சார்.. வழக்கம்தான் சார் அது ..  வரவேற்கிறது, அன்பா கேட்பது எல்லாம் எல்லா ஊர்லயும் இருக்குதுங்க. எங்க ஊர்ல இருக்குதுங்க. எங்க வீட்டுக்கு வந்தவங்களை வெளில போங்கன்னா சார் சொல்வோம்.. யார் ஊர்லயும் சொல்ல மாட்டோம் சார் என்று அதிரடி காட்டவே அந்த கோயம்பத்தூர்க்காரர் ஸ்டன் ஆகி விட்டார்.


மொத்தத்துல வேற லேவல் ஆட்டம் காத்திருக்கு போல.. காத்திருந்து ரசிப்போம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்