மும்பை: விஜய் சேதுபதி - காத்ரீனா கைப் இணைந்து நடித்துள்ள இந்திப் படமான மெர்ரி கிறிஸ்துமஸ் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி தமிழ் படங்களைத் தேடி இப்போது பான் இந்தியா ஸ்டாராகி விட்டார். தெலுங்கில் நடிக்கிறார். தமிழில் விதம் விதமான, வித்தியாசமான கேரக்டர்களைத் தேடித் தேடி நடிக்கிறார். அத்தோடு இந்தியிலும் அசத்துகிறார்.
சமீபத்தில் வெளியான ஜவான் படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் அசத்தியிருப்பார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் காத்ரீனா கைபுடன் இணைந்து மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தின் ரிலீஸ் பலமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது ரிலீஸ் தேதி இறுதியாகியுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள முதல் படம்தான் இந்த மெர்ரி கிறிஸ்துமஸ், இப்படம் ஜனவரி 12ம் தேதி திரைக்கு வரும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
டிப்ஸ் பிலிம்ஸ் மேட்சாப்க்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், எல்லா ஜானர்களையும் மிஞ்சிய கதையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழில் இது வெளியாகிறது. ஏகப்பட்ட நடிகர்கள், நடிகையர்கள் இதில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}