சென்னை: விஜய் நடிப்பில் இன்று வெளிவந்த தி கோட் திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் படக்குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து தற்போது வெளியாகி திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன் மறைந்த நடிகர் விஜயகாந்தின் ஏஐ தொழில்நுட்பத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த நான்கு நாட்களுக்கு திரையரங்கில் உள்ள டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்துள்ளன. இந்த நிலையில், முழுபடமும் இணையத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினரை வேதனை அடையச் செய்துள்ளது. படக்குழுவினர் படம் வெளியாதவதற்கு முன்னரே இணையதளத்தில் வெளியாகாமல் இருக்க தடை உத்தரவு வாங்கியுள்ளனர். இந்த படம் இணையதளத்தில் வெளியானால் பெரிய அளவில் பொருட் செலவும், இப்படத்தில் நடித்தவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று கூறி தடை உத்தரவு வாங்கியிருந்தனர்.
இப்படம் சுமார் 330 கோடி பொருட் செலவில் உருவாகியுள்ளது. ஆனாலும் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவோர் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. வழக்கம் போல தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளியாகியுள்ளது. படத்தை, இணையதளத்தில் இருந்து அதனை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}