சென்னை: 40 வருட நண்பர் விஜயகாந்த். போயிட்டார்.. இனி எங்க நல்லது கெட்டதுக்கு யாரும் இல்லை என்று நடிகர் தியாகு கதறி அழுதுள்ளார்.
விஜயகாந்த்துக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவர் தியாகு. விஜயகாந்த்தின் ஆரம்ப காலம் முதல் நண்பராக இருந்தவர் தியாகு. விஜயகாந்த் மரணச் செய்தியால் அவர் மிகவும் உடைந்து போயுள்ளார்.
சன் டிவிக்கு அவர் அளித்த பேட்டியின்போது, 40 வருஷமா எனக்கு நண்பர்சார். வெள்ளை உள்ளம் படைச்ச மனிதர். உள்ளத்தில் எதையும் வச்சுக்க மாட்டார். உதவின்னு வந்தவங்களை சும்மா விட மாட்டார். சாப்பாடு போட்டு சாப்பிட வச்சு அழகு பார்த்தவர். அவரால் உதவி பெற்றவங்கதான் அதிகம்.

என் கிட்ட அவ்வளவு பாசமா இருப்பார். அவர்தான் சார் எங்களுக்கு எல்லாமே.. எங்க எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்தான். இனி எங்களுக்கு யாரும் இல்லை சார். எங்களால தாங்க முடியலை சார் என்று கூறி கதறி அழுதார் தியாகு.
விஜயகாந்த்துடன் பல படங்களில் நடித்துள்ளார் தியாகு. விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது அவருடன் இணைந்து பணியாற்றியவர். விஜயகாந்த்தின் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் தியாகுவும் ஒருவர்.
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
{{comments.comment}}