சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் சிறப்பாக ஒத்துழைப்பதாகவும் சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தீவிர அரசியலில் அவர் ஈடுபடுவதில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் திடீரென சென்னை மியாட் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் வழக்கமான பரிசோதனைக்காக வந்துள்ளார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் திடீரென அவர் செயற்கை சுவாசத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் இதை வதந்தி என்றும் விஜயகாந்த் நலமாக இருப்பதாகவும், தேமுதிக அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது சென்னை மியாட் மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
விஜயகாந்த் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}