சென்னை: எங்களது தந்தை வாழ்ந்த வாழ்க்கை ஒரு சகாப்தம்.. அவர் சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல.. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்.. என விஜயகாந்த்தின் இரு மகன்களும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் முன்னாள் நடிகர் சங்கத் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு, நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தர் கூட்டம் நடைபெற்றது. இதில் திரையுலகினர்களும்,தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளும், விஜயகாந்தின் மகன்கள், அவரது மைத்துனர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட விஜயகாந்த் மகன்கள் சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் தனது தந்தையை பற்றி புகழ்ந்து பேசினர்

இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் பேசும்போது, கூறியதாவது:
நான் முதல்முறையாக சகாப்தம் படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும்போது என் தனத்தை என்ன சொன்னார் என்றால், எல்லோரும் வருவதற்கு முன்பே 6 மணிக்கு முதல் ஷாட் என்றால் ஐந்து நிமிடம் முன்னதாகவே அங்கே இருக்க வேண்டும் எனக் கூறினார். காரணம் தயாரிப்பாளர் நம்மால் நஷ்டமடைய கூடாது. அதேபோல இயக்குனருக்கும் பக்கபலமாக இருந்து வேலைகளை முடிக்க வேண்டும் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னதை முடிந்த அளவு நான் கடைபிடித்து கொண்டு இருக்கிறேன்.
அதேபோல சனி ஞாயிறுகளில் எங்கள் வீடு தேடி வந்து அப்பாவை சந்திக்கும் நபர்கள் அனைவருக்கும் எங்களையும் உணவளிக்க சொல்லி ஆரம்பத்தில் இருந்தே வளர்த்தார். அதையே தான் இப்போதும் செய்து வருகிறோம். இனியும் தொடர்ந்து செய்வோம். அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு சகாப்தம். அவரது இறுதி ஊர்வலத்திற்காக திரண்ட மக்களை பார்க்கும்போதே அது தெரிந்திருக்கும்.
அவர் சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல.. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்.. இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு சிறப்பான நிகழ்ச்சி.. காரணம் அப்பாவை பொறுத்தவரை எல்லாமே சினிமா தான்.. வீடு, நடிகர் சங்கம், படப்பிடிப்பு என மாறிமாறி சுழன்றவர். இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் பேசும்போது கூறியதாவது:
சிறுவயதில் இருந்து என் முகத்தை நான் கண்ணாடியில் பார்த்ததை விட என் தந்தையின் முகத்தைத்தான் அதிக முறை பார்த்துக் கொண்டிருப்பேன். இதுவரை நானும் என் தம்பியும் எந்த ஒரு நடிகர் சங்க நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதில்லை. இதுதான் முதன்முறையாக கலந்து கொள்ளும் நிகழ்வு. அது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வாக இருப்பது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.
எங்கள் தந்தையின் கனவை நிச்சயமாக நானும் சண்முக பாண்டியனும் நிறைவேற்றுவோம் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன், கடந்த பத்து வருடங்களாக அவர் மிகுந்த உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவருக்கு இருந்த வில் பவர் காரணமாக அனைத்தையும் தாங்கினார். வேறு ஒரு நபராக இருந்திருந்தால் நிச்சயமாக இதை தாங்கி இருக்க முடியாது. அவர் இறக்கும் முன்பு வரை கூட நல்ல நினைவாற்றலுடன் தான் இருந்தார்.
அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக கூட எங்கள் வீட்டில் பணியாற்றும் ஊழியர்களை அழைத்து யூடியூப்பில் அவர் நடித்த படங்களின் பாடல்களை போடச்சொல்லி கேட்டுக் கொண்டுதான் இருந்தார். சிசிடிவி கேமராவில் பார்க்கும்போது அவர் தாளம் போட்டு அந்த பாடல்களை என்ஜாய் பண்ணி கேட்டு கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
அதேபோல கேப்டனின் இறுதி அஞ்சலியில் நிறைய பேர் வந்திருக்கலாம். சில பேரால் வர முடியாமல் போய் இருக்கலாம். இதில் யாரையுமே நாங்கள் தவறாக நினைக்கவில்லை. அவர்கள் மீது வருத்தமும் இல்லை.. கேப்டனுக்கும் யார் மீது எந்த வருத்தமும் இல்லை என்றார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}