சென்னை: சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் அங்கே விஜயகாந்த்துக்கு என்று ஒரு மாளிகை திறந்து இருக்கும் என்று இயக்குனர் மிஷ்கின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி:
ஒரு அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் தமிழர்களின் மனதில் ஒரு பெரும் ஆலமரமாக ஓங்கி வளர்ந்து நிழல் கொடுத்து கனி கொடுத்து அருள் கொடுத்து அன்பு கொடுத்து இன்று இந்த மண்ணிலே சாய்ந்து விட்டீர்களே ஐயா.

நீங்கள் சாய்ந்தாடும் இந்த தமிழ் பூமி தவம் என உங்களை சுமக்கும். உங்கள் வேர்கள் எங்கள் இதயங்களில் பயணிக்கும். நீங்கள் விட்டுச் சென்ற விழுதுகள் இந்த பூமியில் மரங்களாய் வளரும். சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் அங்கே உங்களுக்கு ஒரு மாளிகை திறந்து இருக்கும். ஓய்வெடுங்கள் ஐயா என்றும் சிரித்த உங்கள் கன்னங்களில் நான் முத்தமிடுகிறேன் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.
எஸ்.எஸ் பாஸ்கர்
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் நடிகர் எஸ். எஸ்.பாஸ்கர். குமுறிக் குமுறி அவர் அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் உருக வைத்தது.
இயக்குநர் பாலா
என் வாழ்க்கையில நான் பார்த்த முதல் செலிபர்டி அவர் தான். உன்னதமான மனிதர். அவரை முதல் முதலில எங்க ஊருல தான் தூரத்துல இருந்து பார்த்தேன். அதுக்கப்பறம் அவரை பார்க்கனும்னு நினைச்சேன். எப்படி பார்க்கிறதுன்னு தெரியலை, ஆனாலும் அவரை பார்க்கனும் நினைச்சேன். இன்னிக்கி தான் பார்த்தேன். அவரை பத்தி பேச எனக்கு தகுதி இல்ல. அவ்வளவு பெரிய ஆளும் இல்ல, அவரு கிட்ட இருந்து நிறைய கத்துக்கிறனும். அவர் எல்லாரு மனசுலயும் இருக்காரு. எம் மனசுல நெறையா இருக்காரு என்று கூறியுள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}